It is difficult to describe love because it is all about feelings says rashmika mandanna
ராஷ்மிகா மந்தனா டோலிவுட்டின் மிகப்பெரிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மேலும், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா: தி ரைஸ் படத்துக்கு பிறகு, ராஷ்மிகாவின் ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகமாகியுள்ளது.
Advertisment
முன்னதாக, ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும், இருவரும் அந்த செய்திகளை மறுத்தனர்.
இப்போது, இந்தியா டுடே உடனான உரையாடலின் போது, ரஷ்மிகா காதல், உறவுகள் மற்றும் எப்படிப்பட்ட ஆணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
Advertisment
Advertisements
"என்னைப் பொறுத்தவரை, அன்பு என்பது ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது, பிடித்தவருக்காக நேரம் செலவிடுவது மற்றும் அவர்களுடன் பாதுகாப்பாக உணர்வது தான். அன்பை விவரிப்பது கடினம், ஏனென்றால் அது உணர்வுகளைப் பற்றியது. காதல் இரு இதயங்களில் இருக்கும்போது மட்டுமே செயல்படுகிறது.
மேலும்’ திருமணத்தைப் பற்றி பேசுகையில், "இதைப் பற்றி என்ன நினைப்பது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் இப்போது அதற்கு மிகவும் இளமையாக இருக்கிறேன். நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நபர்’ உங்களை வசதியாக உணரச் செய்ய வேண்டும் என்று ராஷ்மிகா கூறினார்.
ராஷ்மிகா மந்தனா இரண்டு பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு படத்திலும், அமிதாப் பச்சனுடன் குட்பை படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் புஷ்பா: தி ரைஸின் தொடர்ச்சியான புஷ்பா: தி ரூல் (புஷ்பா 2) படப்பிடிப்பிலும் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.