விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐ.டி. விசாரணை; மாஸ்டர் படத்துக்கு இலவச விளம்பரம் என கலாய்க்கும் ரசிகர்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அளித்து அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள், இவர்கள் ஏன் தளபதி விஜய்யை குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னவானாலும், மாஸ்டர் படத்துக்கு ஃப்ரீ புரமோஷன் தொடங்கி விட்டது…

By: Published: February 5, 2020, 5:01:03 PM

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அளித்து அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள், இவர்கள் ஏன் தளபதி விஜய்யை குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னவானாலும், மாஸ்டர் படத்துக்கு ஃப்ரீ புரமோஷன் தொடங்கி விட்டது என்று (இலவச விளம்பரம்) தொடங்கிவிட்டது என்று டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் மாஸ்டர் படத்தி படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தி வந்தனர். அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று விஜய்யை சந்தித்து சம்மன் அளித்தன். பின்னர், விஜய்யை தனிமைபடுத்தி பிகில் படத்தின் சம்பள விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதனால், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வருமானவரித்துறை விசாரனை நடத்தியதை அறிந்த விஜய் ரசிகர்கள், சமூக ஊடகங்களில், இவர்கள் ஏன் தளபதி விஜய்யை குறிவைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், எப்படி இருந்தாலும் இவர்களால் மாஸ்டர் படத்துக்கு இலவச விளபரம் கிடைத்துள்ளது.” என்று கூறி கலாய்ந்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:It officers summon to vijay in master shooting spot vijay fans condemns

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X