IT Raid Rumour on Vijay Sethupathi's House : நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனையா? பரபரப்பு தகவல்!!!

IT Raid on Vijay Sethupathi's House : நடிகர் விஜய் சேதுபதி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IT Raid Rumour on Vijay Sethupathi’s House : மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. சினிமா மட்டும் இல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் அவ்வப்போது தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.

IT Raid Rumour on Vijay Sethupathi’s House : நடிகர் விஜய் சேதுபதி வருமான வரித்துறை சோதனையா ?

இந்த ஆண்டு இவரது சொந்த தயாரிப்பில் வெளியான ஜூங்கா, மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் வசூலில் சாதிக்கவில்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் நடித்த இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. அத்துடன் அவரது கதாப்பாதிரமும் பெரிதாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட அரை டஜன் படங்களை அவர் கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வீட்டிற்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அவரது இல்லத்தில் ஐடி ரெய்டு நடக்கிறது என்று பலரும் செய்திகளை பரவி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த போது, சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வருமான வரி தாக்கல் செய்ததாகவும். அதற்காக சிலர் அவருக்கு வீட்டிற்கும் வந்துள்ளனர். ஆனால் வேலையை முடித்து திரும்பி செல்லும்போது சில ஆவணங்களை விஜய் சேதுபதி வீட்டில் விட்டுச் சென்ற காரணத்தால், அதனை எடுத்துச் செல்ல இன்று வந்துள்ளனர்.

அந்த அதிகாரிகள் வருவதை பார்த்த சிலர், உடனே அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது என்று வதந்தியை பரப்பினர். சுவருக்கு சுவர் காது இருப்பது என்று கூறுவது போல், இந்த வதந்தி மள மளவென காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close