ராம் இயக்கத்தில் மம்முட்டி – அஞ்சலி – பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் தங்க மீன்கள் படத்தை போலவே குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது.
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தம் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில், கவிப்பேரரசு வைரமுத்து, சுமதி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயற்கை விதவிதமாகப் படைத்து, அனைத்தையும் சமமாகப் பாவிக்கிறது என்ற நோக்கத்தோடு தயாராகியுள்ள ‘பேரன்பு’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
#Peranbu Audio Launch Stills and Team Details On https://t.co/aMUkVWUgm4#PeranbuAudioLaunch @mammukka @yoursanjali @Director_Ram @thisisysr @PeranbuOfficial @plthenappan @jmrajan @onlynikil pic.twitter.com/WMmsiwCslY
— Nikkil (@onlynikil) 15 July 2018
இசை வெளியீட்டு விழாவில் பேசி இயக்குனர் அமீர், ” பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு ” கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.