New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/02/hZJhQ0MnUnI9Yh8GsNR7.png)
உண்மையா அடிச்சாங்க, தமிழ் முடிஞ்சு தெல்ங்கிலும் செருப்படி தான்; 7ஜி அனுபவம் சொன்ன நடிகர்!
இன்றைக்கும் 7ஜி ரெயின்போ காலனி என்றால் ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கதான் செய்யும். பாடல், காட்சி, வசனம் என அனைத்துமே ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒத்துபோயிருப்பதாக அமைந்திருக்கும்.
உண்மையா அடிச்சாங்க, தமிழ் முடிஞ்சு தெல்ங்கிலும் செருப்படி தான்; 7ஜி அனுபவம் சொன்ன நடிகர்!
கடந்த 2004-ம் ஆண்டில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி படம். ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான இந்த படம் மெஹா ஹிட் ஆனது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்று வரை இளைஞர்களின் முக்கிய ப்ளே லிஸ்டாகும். பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களின் மனதிற்குள் ஊடுறுவியது என்றே சொல்லலாம். இன்றைக்கும் 7ஜி ரெயின்போ காலனி என்றால் ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கதான் செய்யும். பாடல், காட்சி, வசனம் என அனைத்துமே ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒத்து போயிருப்பதாக அமைந்திருக்கும். தமிழ் தெலுங்கு என 2 மொழிகளிலும் மிகப்பெரிய வணிக வெற்றியை பெற்ற '7ஜி ரெயின்போ காலனி' விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வங்கம், ஒடியா, கன்னடம். இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்தி மறு ஆக்கமான 'மலால்' கடந்த 2019-ல்தான் வெளியானது.
படத்தில் இடம்பெற்ற பஸ் காட்சி, இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. கதாநாயகன் கதிர் (ரவி கிருஷ்ணா) மற்றும் அனிதா (சோனியா அகர்வால்) இடையே நடக்கும் உரையாடலின் உச்சமாக, அனிதா கதிரை செருப்பால் அடிப்பார். இந்தக் காட்சி, கதிரின் அவமானத்தையும், வலியையும் அப்படியே பார்வையாளர்களிடம் கடத்தியது.
சமீபத்தில் பிகைண்ட்வுட்ஸ் நடத்திய நேர்காணலில், நடிகர் ரவி கிருஷ்ணா, இந்தக் காட்சி குறித்த ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பலரும் அது வெறும் நடிப்பு என்று நினைத்திருந்த நிலையில், அந்த அடி உண்மையிலேயே விழுந்தது என்று அவர் கூறினார்.
"பொதுவாக இதுபோன்ற காட்சிகளுக்கு டம்மி பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த படப்பிடிப்பில், செருப்பு டம்மி இல்லை, அது புது செருப்பு. சோனியா அகர்வால் என்னை நிஜமாகவே அடித்தார்" என்று ரவி கிருஷ்ணா கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன், காட்சிகளில் எந்தவித சமரசமும் இல்லாமல், யதார்த்தம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
'டம்மி இல்ல புது செருப்பால நிஜமா அடிச்சாங்க..' 😱 Ravikrishna About 7G Rainbow Colony 😲 Throwback
Posted by Behindwoods Hits on Wednesday, July 30, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.