scorecardresearch

மறு ஜென்மம் எடுக்கும் ஜெயலலிதா ! வதந்திகள் உறுதியானதா?

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவை வழிநடத்திய ஜெ. ஜெயலலிதா மீண்டும் நம் முன்னே தோன்றுவார் என்று கூறிய வதந்திகள் அனைத்தும் உண்மையாகியுள்ளது

jayalalitha biopic, ஜெயலலிதா
jayalalitha biopic, ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் உருவாக இருப்பதாக வெகு நாட்களாக செய்தி ஒன்று பரவி வந்தது. இதனை பலரும் வதந்தி என்று கூறி வந்த நிலையில், அச்செய்தி உண்மை தான் என்று உறுதியாகியுள்ளது. இப்படம் விரைவில் கோலிவுட் திரையுலகில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

இப்படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல். விஜய் எழுதி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தில் அறிமுகமான இவர், சமீபத்தில் சாய்பல்லவி நடித்த ‘தியா’ வரை பல படங்களை இயக்கி இருக்கிறார்.

ஜெயலலிதா

மேலும் இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்தும் இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா

திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்து இயக்குனர் விஜய் முடிவு செய்யவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மாபெரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இது பற்றி கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது இனி எந்த வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: J jayalalithaa biopic

Best of Express