ஜெயலலிதா பாடுன இந்த சாமி பாட்ட கேட்டுருக்கீங்களா?

ஜெயலலிதாவை பார்த்த பந்துலு, ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படத்தில் நடிக்க கேட்டார்.

J Jayalalithaa Death Anniversary : தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா, அரசியலுக்கு வரும் முன் சினிமா உலகில் 20 ஆண்டுகள் கதாநாயகியாக ஜொலித்தார்.

2 வயதாக இருக்கும்போதே தந்தை ஜெயராம் இறந்து விட, தாய் சந்தியா தனது இரண்டு பிள்ளைகளை (ஜெயலலிதா மற்றும் அவரது அண்ணன்) அழைத்துக்கொண்டு மைசூர் மாண்டியாவிலிருந்து புறப்பட்டு தனது தந்தை ரங்கசாமியுடன் பெங்களூரில் வந்து வசித்து வந்தார். அதன் பின்னர் சென்னை வந்து திரைப்படங்களில் நடித்தார். அப்போது ஜெயலலிதாவை சர்ச் பார்க் கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்தார்.

பரத நாட்டியம் கற்றுக் கொண்ட ஜெயலலிதாவின் 12-வது வயதில் அரங்கேற்றம் நடந்தது. அதோடு கர்நாடக இசையும் கற்றுக்கொண்டார். பள்ளிக் கல்வியை முடித்த ஜெயலலிதாவுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை. அப்போது அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. ஜெயலலிதாவுக்கோ படித்து முடித்து வக்கீல் ஆக வேண்டும் என்பது ஆசை. சர்ச் பார்க்கில் படித்தபோது ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில நாடகங்களில் நடித்தார்.

அதன் பின்னர் சங்கர் கிரி எடுத்த எபிஸில் ஆவணப்  படத்தில் ஜெயலலிதா நடிக்க ஒய்.ஜி.பார்த்தசாரதியும், சோவும் சிபாரிசு செய்தனர். அதனால் 13  வயதில் நடிகையாக அறிமுகமானார் ஜெயலலிதா. 1961-ல் அந்தப் படம் வெளியானப் பிறகு, அதே ஆண்டில் கன்னட  படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பி.ஆர். பந்துலு இயக்கிய கர்ணன் படத்தில் ஜெயலலிதாவின் தாய் சந்தியா நடித்தார். இந்த படத்தின்  வெற்றி விழாவில் ஜெயலலிதாவை பார்த்த பந்துலு, ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படத்தில் நடிக்க கேட்டார்.

ஆனால் கல்லூரி படிப்பில் சேர எண்ணிய ஜெயலலிதாவோ முதலில் நடிக்க மறுத்தார். 2 மாதத்தில் படப்பிடிப்பை முடிப்பதாக இயக்குனர் சொன்னதால் அதனை ஏற்று நடித்தார். அந்தப் படத்துக்காக ஜெயலலிதா பெற்ற சம்பளம் 3000 ரூபாய். இதையடுத்து அதே ஆண்டு ‘மனசுலு மமதலு’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு 1980 வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் பாடியிருக்கிறார் ஜெயலலிதா. ’அடிமைப் பெண்’ படத்தில், ’அம்மா என்றால் அன்பு’, ’சூர்யகாந்தி’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியதுடன் இணைந்து, ’நான் என்றால் அது நானும் அவளும்’, ‘அன்பைத்தேடி’ படத்தில் ’சித்திர மண்டபத்தில்’, ’திருமாங்கல்யம்’ படத்தில் ’பொற்குடத்தில் பொங்கும்’ உள்பட பல்வேறு பாடல்கள் அவர் பாடி இருக்கிறார். அதோடு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ’மாரியம்மா முத்துமாரியம்மா’, ’காளி மகமாயி கருமாரியானவளே’, ’தங்கமயிலேறி வருவான் எங்கள் வடிவேலனே’ ஆகிய பக்தி பாடல்களையும் ஜெயலலிதா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close