Advertisment

தளபதி 63: விஜய்யுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

கால் பந்தாட்டத்தையும் அதில் நடக்கும் அரசியலையும் மையப் படுத்தி ‘தளபதி 63’ உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jackie Shroff joins with Vijay

கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

Advertisment

பெயரிடப்படாத இந்தப் படம் ‘தளபதி 63’ என்றே அழைக்கப்படுகிறது. தெறி, மெர்சலைத் தொடர்ந்து அட்லியும் விஜய்யும் மூன்றாவது முறையாக இதில் இணைந்துள்ளனர்.

இதில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மெர்சல், சர்கார் ஆகியப் படங்களைத் தொடர்ந்து ‘ஹாட்ரிக்காக’ விஜய்யின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கால் பந்தாட்டத்தையும் அதில் நடக்கும் அரசியலையும் மையப் படுத்தி ‘தளபதி 63’ உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில், தியாகராஜா குமாரராஜாவின் ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருந்தார். அதனால் தளபதி 63-யிலும் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

 

Actor Vijay Thalapathy Vijay Tiger Shroff
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment