scorecardresearch

Jagame Thandhiram Tamil Movie: ஜகமே தந்திரம் முழுப் படத்தையும் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Jagame Thandhiram Full Movie To Free Download : ஒடிடி தளத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் திரைபபடம் வெளியான சில மணி நேரங்களில் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

Jagame Thandhiram Tamil Movie: ஜகமே தந்திரம் முழுப் படத்தையும் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
Actor Dhanush Jagame Thandhiram Full Movie Leaked

Jagame Thandhiram Full Movie Leaked In Tamilrockers: தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது இந்திய சினிமாவிற்கே பெரும் சவாலாக இருப்பது சினிமா பைரசி. திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் படங்கள் அடுத்த சில மணி நேரங்களில் இணையத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ராக்கர்ஸ் என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட இந்த இணையதளம் தொடர்பாக தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் காவல் நியைத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனாலும் புதிய படங்கள் உடனடியாக இணையதளங்களில் வெளியாவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கரணமாக திரையரங்குகள் தடை செய்யப்பட்டுள்ளதால், சிறு பட்ஜெட் மற்றும் ஒரு சில பெரிய நடிகர்களின் படங்கள் இணையதளமாக ஒடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராக ஜகமே தந்திரம் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளினக்ஸ் இணையதளத்தி நேற்று (ஜூன் 18) வெளியாளது.

Jagame Thandhiram Full Movie Leaked By Tamilrockers- ஜகமே தந்திரம் ஃபுல் மூவி லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த பட வெளியீட்டிற்காக தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனது.   

இதனையடுத்து ஜகமே தந்திரம் படம் நேற்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃப்ளிக்ஸ்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் படுகுஷியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பணம் கட்டி பார்ப்பதைவிட தமிழ்ராக்கர்ஸ் மற்றும் டெலிகிராம் தளங்களில் படம் வெளியிடப்பட்டுள்ளதா என்று தேடி வருகின்றனர்.

அவர்க்ள தேடியது போலவே ஜகமே தந்திரம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஆன்லைனில் ஹெச்.டி. தரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படம் தியேட்டர்களில் அல்ல க ஓடிடியில் வெளியானாலும் அதை வெளியிடுவோம் என்று சாவல் விடும் அளவிற்கு தமிழ்ராக்கர்ஸ் வேலை செய்கிறது. கொரோனா காலகட்டத்தில் முதல்முறையாக தனுஷ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.  முன்னதாக கடந்த கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், ஜகமே தந்திரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியான இந்த சமயத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இந்த படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. மேலும் படம் வெளியாவதற்கு முன்னாள் படம் குறித்து அனைவரும் பலவகையான எதிர்பார்ப்புகளுடன் இருந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் படம் சுமாராக இருப்பதாகவும், படத்திற்கு பில்ட்அப் தான் பெரிதாக கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jagame thandhiram full movie leaked by tamilrockers to free download actor dhanush tamil movie