Jai - Anjali: ஜெய்யும் அஞ்சலியும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதிலிருந்து அவர்கள் ரிலேஷன் ஷிப்பில் வதந்திகள் பரவத் தொடங்கின. இருப்பினும் இன்றுவரை அவர்கள் இருவரும் அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் செய்தி ஒன்று பரவியது.
Advertisment
இந்நிலையில் தற்போது நடிகரும், ஜெய்-அஞ்சலி நடித்த ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளருமான போஸ்டர் நந்தகுமார், 'பலூன்' படத்தைத் தயாரித்தபோது ஜெய் தனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய் - அஞ்சலி
'மெட்ராஸ்', 'கபாலி' போன்ற படங்களில் நடித்த நந்தகுமார் தனது சமீபத்திய பேட்டியில், அஞ்சலி நல்ல மனம் கொண்டவர் என்றும், நன்கு ஒத்துழைத்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஜெய், அஞ்சலியை குழப்பி, பலமுறை படப்பிடிப்புக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறியுள்ளார். ”ஒருமுறை, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது, இயக்குநர் சினீஷ் அஞ்சலியை ஒரு ஷாட்டுக்கு அழைத்தார். அப்போது ‘மேடம்’ என்று அவர் குறிப்பிடவில்லை . அதை அஞ்சலியும் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஜெய் கோபமடைந்து படக் குழுவினருடன் வாக்குவாதம் செய்து, படப்பிடிப்பை நிறுத்துவேன் என்று சவால் விட்டார். பின்னர் அஞ்சலியிடம் சென்று, வயிற்று வலி என்று குழுவினரிடம் கூறும்படி கன்வீன்ஸ் செய்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் கார் தயார் செய்தோம். ஆனால் அவர் அதற்கு பதிலாக சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாமல், ரத்து செய்யப்பட்டன” என்றுக் கூறியுள்ளார் நந்தகுமார்.
Advertisment
Advertisements
மேலும் தொடர்ந்த அவர், “ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அஞ்சலி மற்றும் ஜெய் ஆகியோருக்காக இரண்டு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவர்கள் ஒன்றை மட்டுமே பயன்படுத்தினர். மற்றொன்று பூட்டப்பட்டே இருந்தது. அந்த ரூமிற்கு ஒரு நாளைக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் வாடகை என்பதால் ஒரு அறையை கேன்சல் செய்யுமாறு அவர்களிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர். இந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகு தான் ஒருபோதும் ஜெய்யின் படங்களை தயாரிக்கவே கூடாது என முடிவெடுத்தேன். அஞ்சலியைப் போன்ற ஒரு நல்ல நபரின் மனதையும் ஜெய் கெடுத்துவிட்டார்” என்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news