scorecardresearch

ஆஸ்கார் விருது பட்டியல்: ஜெய் பீம் உட்பட 3 இந்திய படங்களுக்கு இடம்

94வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படும். ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ஆம் தேதி நடைபெறும்.

94th Academy Awards
Jai Bhim and Arabikadalinte Simham shortlisted for the 94th Academy Awards

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மலையாள ஆக்‌ஷன் மரைக்காயர்; அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகியவை, 94வது ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 276 படங்களின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய் பீமின் சில காட்சிகள் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

ஜெய் பீம் படத்தை தயாரித்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இந்த செய்தியை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தது.

நாமினேஷஸ்க்கான வாக்களிப்பு, ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி முடிவடையும். இதற்கான இறுதி பரிந்துரைகள், பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படும். 94வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ஆம் தேதி நடைபெறும்.

நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பிறகு, ஜெய் பீம் 2021 இன் மிகவும் பாராட்டப்பட்ட படங்களில் ஒன்றாக ஆனது. இப்படம் 90களில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தில், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம், சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்றது. பிரியதர்ஷன் எழுதி இயக்கிய இந்தப் படம், மோகன்லால் நடித்த ஜாமோரின் புகழ்பெற்ற கடற்படைத் தளபதி குஞ்சாலி மரக்கார் IV-ன் போர் சுரண்டல்களைக் காட்டுகிறது. இதில் அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, பிரபுதேவா, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெய் பீம் மற்றும் மரைக்காயர் மட்டுமல்ல, இயக்குநர்கள் ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷின் ரைட்டிங் வித் ஃபயர், தலித் பெண்களால் நடத்தப்படும் ஒரு நாளிதழைப் பற்றிய திரைப்படம், 2022 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jai bhim and arabikadalinte simham shortlisted for the 94th academy awards