scorecardresearch

ஜெய் பீம் திரை விமர்சனம்: சூர்யாவின் பவர்ஃபுல் திரைப்படம்!

Jai Bhim movie review: ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா அனல்பறக்கும் வழக்கறிஞராக எளிதாக வாழ்ந்திருக்கிறார். அவர் இயக்குனர் எழுதிய வரிகளை மட்டும் பேசி நடிக்காமல் இந்தப் படத்தில் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அசைவும் உண்மையாக இருக்கிறது.

Jai Bhim movie review, Jai Bhim review, Suriya's powerful movie, ஜெய் பீம் திரைவிமர்சனம், ஜெய்பீம், சூரியா, சூர்யா, சந்துரு, Jai Bhim, tamil cinema, Chandru, Justice chandru

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் லாக் அப் சித்திரவதையில் அடித்து கொள்ளப்பட்ட ஒரு பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்து மனித உரிமைகள் திரைப்படங்களில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

நடிகர் சூர்யா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் சந்துருவாக, செங்கேணியிடம் புகாரைக் கேட்பதற்கு முன், அவர் நடந்த சம்பவங்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் நடந்ததை என்ன நடந்தது என்பதை விளக்குமாறு கேட்கிறார். இந்த ஒரு வசனமே, இப்படத்தில் நாம் பார்க்கப் போவது சூர்யாவின் பிரம்மாண்டமான சூரரைப் போற்று படம் அல்ல என்று இயக்குநர் டி.ஜே.ஞானவேல் சினிமா ரசிகர்களுக்கு உறுதியளிக்கிறார். ஜெய் பீம் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாக ஒரு பழங்குடி இன குழுவினருக்கு நடந்தது.

இயக்குனர் த.சே.ஞானவேல் திரைப்படத்தில் இந்த வரியை ஏன் சேர்க்க வேண்டும் என்று உணர்ந்தார் என்று ஒருவர் பார்க்கலாம். ஜெய் பீம் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட சம்பவங்கள் நம் பார்வைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனத்துடனான நம்முடைய தொடர்பு என்பது சிவில் மற்றும் மரியாதைக்குரியதாக இருந்திருக்கும். உங்கள் சமூக நிலை, உங்கள் கல்வி நிலை, உங்கள் பணத்தின் அளவு, சவாரி செய்யும் வாகனம் மற்றும் வசிக்கும் இடம் ஆகியவற்றின் காரணமாக உங்கள் தொடர்புகள் நல்ல முடிவைப் பெற்றதாக நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்களின் உரிமைகள் மற்றும் சட்டம் உங்களுக்குத் தெரியும், உங்களுக்காக நீங்கள் உறுதியாக நிற்பீர்கள் என்று அதிகாரியிடம்கூட சொல்லியிருப்பீர்கள்.

ஆனால், நம்முடைய மிகப்பெரிய ஜனநாயக அமைப்பின் விரிசல்களில் வசிக்கும் மக்களுக்கு அது எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. அடையாள அட்டைகூட இல்லாத ஒரு நபராக இருப்பது எப்படி இருக்கும்? அல்லது அவர்களுடைய உடலையும் கண்ணியத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு சொல்ல முடியாத சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவராக இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு தெரியாது.

நாம் வீடுகளிலும், சௌகரியமான திரைக்கு அருகிலும் அமர்ந்துகொண்டு ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு “அட, இது ரொம்ப அதிகம். ஒருத்தருக்கு இது எப்படி நடக்கும்?” என்று கேட்கலாம். ஆனால், உண்மை கற்பனையை விட விசித்திரமானது. அதனால்தான், இயக்குனர் த.செ.ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தில் இதற்கு மறுப்பு சேர்க்கிறார். நாம் பார்ப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது உண்மையான நிகழ்வுகளின் மிகைப்படுத்தல் அல்ல.

இயக்குனர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் ஏற்கனவே நமது குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள ஆழமான அழுகலை நமக்கு வெளிப்படுத்தியிருந்தது. மேலும், அவரது சமரசமற்ற மனப்பக்குவம், போலீஸ் காவலில் நடக்கும் சித்திரவதையின் பயங்கரத்தை அனுபவமாக்கியது. அதேபோல், ஜெய் பீம் ஒரு விரிவான யதார்த்த திரைப்படம். ஆனால் குறைவான அவநம்பிக்கையைக் கொண்டது.

விசாரணை திரைப்படத்தைப் போல இல்லாமல், ஜெய் பீம் திரைப்படம் சட்டத்தின் வலிமையான ஆயுதத்தை ஏந்திய ஒரு கலகக்கார இளம் வழக்கறிஞர் சந்துரு நமக்கு இருக்கிறார். திருட்டு குற்றச்சாட்டின் பேரில் உள்ளூர் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டதில் இருந்து கணவர் ராஜகண்ணுவின் இருப்பிடம் தெரியவில்லை என்ற பழங்குடிப் பெண்ணான செங்கேணியின் வழக்கை சந்துரு எடுத்துக்கொள்கிறார்.

முதலில், அனைத்து ஆதாரங்களும் காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெறி பிடித்த போலீசாருக்கு ஆதரவாக இருப்பதால் வழக்கு நடத்துவது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. அந்த ஊரில் வேறு எந்த வழக்கறிஞரும் செங்கேணிக்காகப் போராடத் தயாராக இல்லை என்பது அதற்கான காரணமாக இருக்கிறது. ஆனால், நிறைமாத கர்ப்பிணியான, ஆதரவற்ற பெண்ணின் சார்பாக சந்துரு மொத்த அரசு இயந்திரம் எதிர்த்து நிற்கிறார்.

சந்துரு கவசம் அணிண்து ஜொலிக்கும் மாவீரர் அல்ல, பி.ஆர்.அம்பேத்கரைப் பின்பற்றுபவர், அவர் கருப்பு கோட் அணிந்து இந்திய அரசியலமைப்பின் அறிவைப் பயன்படுத்துகிறார். அவன் அரச வாழ்க்கை வாழவில்லை. அவர் நெரிசலான பேருந்துகளில் பயணம் செய்கிறார். ரயிலில் பொது வகுப்பில் கீழே அமர்ந்து பயணம் செய்கிறார்.

திரைப்படத்தில் சந்துருவின் முதல் நீதிமன்றத் தோற்றம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கும் காவலர்களால் தவறாக சிறையில் அடைக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே ஒரு மனு மூலம், சந்துரு தனது வாடிக்கையாளருக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுமார் 7,000 பேருக்கு ஜாமீன் பெறுகிறார். அந்த தருணத்தில், அதிகாரத்தில் உள்ள நேர்மையற்ற மனிதர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு அதை நீதிமன்றங்களின் அதிகாரத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்கிறீர்கள்.

ஜெய் பீம் படத்தின் ஹீரோ சந்துரு மட்டுமல்ல. இந்தப் படத்தில் வரும் அனைத்து ஹீரோக்களும் வன்முறையற்றவர்கள். ஆனால், எந்த விதமான கொடுங்கோன்மைக்கும் கீழ்ப்படியாத கலகக்காரர்கள். மணிகண்டன் நடித்த ராஜகண்ணுவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அவருக்கே தெரியாமல் அவர் காந்திய நற்பண்புகளின் உருவகமாக இருக்கிறார். காந்தியைப் போல என்றால், போலீசார் ராஜகண்ணுவின் எலும்பை உடைக்கலாம், சித்திரவதை செய்யலாம் அல்லது கொல்லலாம். பின்னர், அவர்கள் அவரது இறந்த உடல் இருக்கும், ஆனால் அவரது கீழ்ப்படிதல் இருக்காது.

நவீன கால காந்தியின் உரிமைகளை நிலைநிறுத்த, நமக்கு சந்துரு என்ற நவீன கால அம்பேத்கர் தேவை. வன்முறையில் ஈடுபடும் ஆண்களே இந்தப் படத்தில் வில்லன்கள். ராஜகண்ணு, செங்கேணி மற்றும் சந்துரு ஆகியோரின் அகிம்சை எதிர்ப்புக்கும் நெகிழ்ச்சிக்கும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான முறைகள் பொருந்தவில்லை.

சூர்யா ஒரு ஃபயர்பிரண்ட் வழக்கறிஞரின் பாத்திரத்தில் இயற்கையாகவும் மிகவும் கச்சிதமாக உணர்கிறார். அவர் இயக்குனரால் எழுதப்பட்ட வரிகளை மட்டும் பேசி நடிக்கவில்லை என்பது போல் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அசைவும் உண்மையாக இருக்கிறது.

திரைவிமர்சனம் மனோஜ் குமார் ஆர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jai bhim movie review suriyas most powerful drama yet