மொழி விவாத சர்ச்சையில் ‘ஜெய் பீம்’… பிரகாஷ் ராஜை வம்பிழுக்கும் இந்தி இணைய வாசிகள்!

Prakash Raj slapping a man for ‘speaking in Hindi’ triggers debate on social media Tamil News: ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தி பேசுபவரை பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் மொழி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jai Bhim movie Tamil News: Prakash Raj slapping a man for 'speaking in Hindi' triggers debate on social media

Jai Bhim movie Tamil News: தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜெய் பீம். தற்போது அமேசான் பிரேமில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ் பெருமாள் சாமி எனும் காதாபாத்திரத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், பிரகாஷ் ராஜ் நடித்துள்ள ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் மொழி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் பிரகாஷ் ராஜ் இந்தி பேசும் (சேட்ஜி) ஒருவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேசு என்கிறார். இதற்கு இந்தி பேசுபவர்கள் பெரும் அதிருப்தியை சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரபல திரைப்பட விமர்சகர் ரோஹித் ஜெய்ஸ்வால், ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்த பிறகு நான் உண்மையிலேயே மனம் உடைந்தேன். இதில் நடிகரையோ அல்லது மற்ற யாரையோ எதிர்க்கவில்லை. ஆனால், படத்தில் ஒரு நபர் ஹிந்தி பேசுவதை, பிரகாஷ் ராஜ் அவரை அறைந்து தமிழில் பேசச் சொல்வது போன்ற ஒரு காட்சி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான காட்சி தேவை இல்லை… அதை குறைப்பார்கள்(கட் செய்வார்கள்) என்று நம்புகிறேன்” என்றுள்ளார்.

இந்த காட்சியால் இந்தி பேசுவர்களின் மனம் புண்பட்டுள்ளதாகவும் சமூக வலைதள பக்கங்களில் சில இந்தி பேசும் நபர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தி பேசியவரை அறைந்ததற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சிலர் இந்த கட்சிக்கு ஆதரவாக பேசியும் வருகின்றனர்.

இந்த காட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் உத்தவ் நாயக், இந்தி பேசும் நபர் தான் குற்றத்தில் ஈடுபட்டதில் இருந்து தப்பிப்பதற்காகவும், உண்மையை மறைக்கவும் இந்தியைப் பயன்படுத்துகிறார். குற்றவாளிகளுடன் ஒத்துழைக்கிறார். பிரகாஷ் ராஜ் இந்தியில் பேசியதற்காக அறைந்ததற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெய் பீம்’ படத்தில் உள்ள இந்த காட்சி இந்தி மொழி பேசுபவர்களின் உணர்வுகளை கொச்சை படுத்தியுள்ளதாக தற்போது சமூக வலைதள பக்கங்களில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், மற்ற மொழி பேசுபர்களின் உணர்வுகளை எப்படி இந்தி மொழி படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள் என்பதையும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jai bhim movie tamil news prakash raj slapping a man for speaking in hindi triggers debate on social media

Next Story
ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ரஜினியின் அண்ணாத்த!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com