Advertisment

முதல் நாள் வசூல் ரூ. 52 கோடி: ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸ் சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் முதல் நாளில் ரூ.52 கோடி வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer

ஜெயிலர் முதல் நான் வசூல் நிலவரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில், நேற்று வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், சுனில், யோகிபாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் நடப்பு ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படமாக மாறியுள்ள நிலையில், படத்தின முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படி, ஜெயிலர் இந்தியாவில் முதல் நாளில் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் நிகர வசூல் 44.5 கோடி. இதன் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படம் என்ற பெருமை ஜெயிலருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 இந்திய அளவில் முதல் நாளில் ரூ 32 கோடி வசூலித்தது.

ஜெயிலர் நாள் முழுவதும் 78.62% தியேட்டதுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், படத்தின் ரூ.52 கோடி மொத்த வசூலில், தமிழ்நாடு ரூ.23 கோடியும், கர்நாடகா ரூ.11 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரூ.10 கோடியும், கேரளா ரூ.5 கோடியும் வசூலித்துள்ளன. வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வரும் ஜெயிலர் படம் குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் $1.45 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த வசூல் விஜய்யின் வாரிசு படத்தைவிட அதிகமாகும், முந்தைய அறிக்கையில், டிக்கெட் புக்கிங் ஆப், புக் மை ஷோ (BookMyShow) தங்களது தளத்தில் இருந்து 900,000 ஜெயிலர் டிக்கெட்டுகளை தென் மாநிலங்களுடன் விற்றதாகப் கூறியுள்ளது. திரைப்படக் கண்காட்சியாளர் அக்ஷயே ரதி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தமிழ் பேசும் பகுதிகளில், ஜெயிலர் ஒரு முழுமையான புயலாக மாறியுள்ளது. எல்லா காலத்திலும் அதிக ஓபனிங் தமிழ் படங்களில் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

ரஜினிகாந்தின் கடைசியாக 2021 ல் வெளியான அண்ணாத்த, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ 70.19 கோடி வசூலித்தது. இரண்டே நாட்களில் ரூ 112 கோடியைத் தாண்டியது. ஆனால் அது தீபாவளிக்கு ரிலீஸ். இதனிடையே இன்று (ஆகஸ்ட் 11) ஆந்திராவில் போலா சங்கர் வெளியாக உள்ளதால், ஜெயிலர் படம் போட்டியை எதிர்கொள்கிறது. சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகும் போலா சங்கர் படம் தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும், இதனால் ஜெயிலரின் வார இறுதி வரவேற்பு கொஞ்சம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Box Office
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment