உலகளவில் வசூலில் சாதனை படைத்து வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது வசூலில் சரிசு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான படம் ஜெயிலர். சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப், விநாயகன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான ஜெயிலர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ஏற்கனவே ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள ஜெயிலர் வெளியாகி 15 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படம் வசூலில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த படம் நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரூ. 3 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ஜெயிலர் படம் 15 நாட்களில் ரூ. 298.75 கோடி (நிகரமாக) வசூலத்துள்ளது என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கூறுகிறார்.
மேலும் ஜெய்லர் இன்று இந்தியாவில் ரூ 300 கோடி வசூலை கடக்கும் என்றும், அதே வேளையில், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 600 கோடியை கடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. புதன்கிழமை நிலவரப்படி, படத்தின் உலகளாவிய வசூல் ரூ.566 கோடியாக இருந்தது. ஏற்கனவெ ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்தே ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில், ஜெயிலர் திரைப்படம் அதை மறக்கடித்துள்ளது என்று கூறி வருகின்றனர்.
ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தமன்னா நடனமாடிய படத்தின் "காவாலா" பாடல், சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த டிராக் யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது மற்றும் ரீல்ஸில் மிகவும் பிரபலமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“