கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்கொயர் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நிலையில், தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் புதிய தாயரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
கோலமாகவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் விஜய் நடிப்பில் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்து இவர் இயக்கிய ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்க விரும்பும் நெல்சன் திலீப் குமார், தனது நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை (மே3) வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் எனது 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் இருந்தது. எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது நிலையான விருப்பமாக இருந்து வருகிறது, இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
“ஃபிலமென்ட் பிக்சர்ஸில், ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான படங்களை உருவாக்குவதே எங்கள் முதன்மை குறிக்கோள். எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் ஒரு படத்தை நாங்கள் தொடங்குகிறோம். மே 3 ஆம் தேதி இது குறித்த அறிவிப்புக்காக காத்திருங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி!" என தெரிவித்துள்ளார்.
பிளாக்பஸ்டர் ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் இயக்கிய பிறகு, நெல்சன் திலீப்குமார் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் தனது நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை நெல்சனே இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“