Advertisment

விஜய் டி.வி-யில் என் முதல் சம்பளம் இதுதான்: இயக்குனர் நெல்சன்

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது இப்படி தான்; அதற்கான முதல் சம்பளம் இவ்வளவு தான்; மனம் திறந்த இயக்குனர் நெல்சன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nelson

நெல்சன் திலீப்குமார்

ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் விஜய் டிவியில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது, முதல்முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அதைத்தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம், வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதனையடுத்து நெல்சனுக்கு ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போர்ஸே கார் பரிசளித்தார்.

இதையும் படியுங்கள்: பார்வை அற்றவராக நடிப்பை கொட்டிய கண்ணன்: ஒரே படத்துடன் காணாமல் போன பாரதிராஜா ஹீரோ ஞாபகம் இருக்கா?

இந்தநிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நெல்சன் தனது முதல் சம்பளம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், என்னுடைய முதல் சம்பளம் 9000 ரூபாய். விஷூவல் கம்யூனிகேசன் முடிச்சிட்டு 2-3 மாதங்கள் பயங்கரமா வேலை தேடிக்கிட்டு இருந்தேன். அப்போ விஜய் டிவியில் வேலை இருக்குனு ஒருத்தர் பரிந்துரை செய்தார். நான் அங்க் ரெஸ்யூம் கொடுத்துட்டு, வெளியில் டீக்கடையில் டீ குடிச்சிட்டு இருந்தேன். அப்போது ஒரு டீம் சூட்டிங்கிற்கு பஸ்ல கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. அதில் லயோலா காலேஜ் இண்டர்ன்ஷிப் பண்றவங்களும் இருந்தாங்க.

அந்த டீம்ல இருந்தவங்க நானும் இண்டர்ன் என நினைத்து என்னையும் பஸ்சில் ஏறச் சொன்னார். நானும் எதுவும் சொல்லாமல் ஏறிப்போயிட்டேன். அங்க 15 நாள் சூட்டிங் முடிஞ்சதுக்குப் பின்னர் தான், நான் லயோலா இண்டர்ன் கிடையாது, வேலை தேடுறவனு தெரிஞ்சது. ஆனால், என்னோட ஒர்க் புடிச்சி என்னை அங்க வேலை செய்ய சொல்லிட்டாங்க. அப்ப பார்த்த வேலைக்காக கொடுத்தது தான் 9000 ரூபாய்.

அப்புறம் விஜய் டிவியில், அழகி நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற சீரியல்களில் அசிஸ்டெண்ட் ரைட்டராக வேலை செய்தேன். நிறைய நிகழ்ச்சிகளில் வேலை செய்த பின்னர், 23 வயதில் ரியாலிட்டி ஷோக்களை டைரைக்ட் செய்ய ஆரம்பித்தேன். சிம்பு என்னோட ஸ்கூல்மேட். விஜய் டிவியில் வேலை பார்த்தப்போது என்னை திரைப்படத்தில் வேலை செய்ய சிம்பு கூப்பிட்டார். ஆனால் என்னால் போக முடியவில்லை. இருப்பினும் நிறைய தொடர்புகள் கிடைத்தது. இவ்வாறு நெல்சன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment