விஜய்க்கு வில்லனாக விஷால்?
வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் அடுத்து தனது 67-வது படமாக விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில், நாள்தோறும் தளபதி 67 தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக லோகேஷ் விஷாலை சந்தித்து கதை கூறியதாகவும், இவர்கள் இருவரும் சந்தித்த வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி – நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது அகிலன். பொன்னியின் செல்வன் 2, இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் இறைவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தனிஒருவன் படத்திற்கு பிறகு இவர்கள் இணையும் 2-வது படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் அஹமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
தொழிலதிபருடன் திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா</strong>
மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான நடிகை ஹன்சிகா தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகா படம் வரவேற்பை பெற்றது. இதனிடையே கடந்த சில வருங்களுக்கு முன்பு சோகைல் என்பருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா தற்போது அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபல கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. உலகத்தின் முதல் சிங்கிள் ஷாக் நான் லீனியர் படம் இது என பார்த்திபன் விளம்பரம் செய்த நிலையில், இதற்கு பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே இரவின் நிழல் படம் இன்னும் ஓரிரு தினங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று பார்த்தீபன் அறிவித்திருந்த நிலையில், படம் இன்னும் ஒடிடி தளத்தில் வெளியாகாததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக பார்த்திபன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“