சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ரூ.430 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள ரஜினி, மோகன்லால் தமன்னா ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராப், தமன்னா பாட்டியா, சுனில் ரெட்டி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் இரண்டு வருட ஓய்வுக்குப் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார். தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, “ஜெயிலர் திரைப்படம் ஏற்கனவே அமெரிக்காவில் 802,628 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.6 கோடி) முன்பதிவு செய்துள்ளது. அதே போல, இந்தியாவில் ரூ.18.24 கோடி முன்பதிவில் சம்பாதித்தது.
72 வயதான நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ஷிவா ராஜ்குமார், தமன்னா பாட்டியா ஆகியோர் இணைந்து நகைச்சுவை-அதிரடியான ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தை ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடி வருகின்றனர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப்படி, “இந்த ஜெயிலர் படத்தின் முதல் நாள் வருவாய் ரூ. 72 கோடி குவித்ததால், படம் நேர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளது.”
நெல்சன் திலீப் குமாரின் ஜெயிலர் படத்தில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற முன்னாள் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த அதிரடி பொழுதுபோக்கு படம் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராப், தமன்னா பாட்டியா, சுனில் ரெட்டி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளபடி, ஜெயிலர் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ஜெயிலர் படம் இதுவரை மொத்தம் ரூ. 430 கோடி வசூலித்துள்ளது. ஜி.க்யூ செய்திப்படி, ரஜினிகாந்த் தனது 169வது படமான ஜெயிலருக்கு ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மோகன்லால்
ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன், மலையாள நடிகர் மோகன்லால் ஒரிஉ கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். 63 வயதான மோகன்லால் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக ரூ 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக ஜி.க்யூ தெரிவித்துள்ளது.
தமன்னா பாட்டியா
ஜெயிலர் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே காவாலா நடனப் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகை தமன்னா பாட்டியா ஜெயிலர் படத்தில் நடித்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதற்காக ரூ 3 கோடி சம்பளம் கேட்டதாக ஜி.க்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக ஜாக்கி ஷெராஃப் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் தலா 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தில் நடித்துள்ள யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஜெயிலர் படம் திரையரங்குகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதோடு விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”