Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜெயிலர் vs லியோ... 2023-ல் அதிக வசூல் செய்த படங்கள் : வெற்றி யாருக்கு?

2023-ம் ஆண்டு வெளியான பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனை செய்துள்ள நிலையில், சிறுபட்ஜெட் படங்கள் பல விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.

author-image
WebDesk
New Update
Highest Crossing 2023

2023-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

2023-ம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்களே உள்ளது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் 300 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ரசிகர்கள் மனம் கவர்ந்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் இருக்கிறது. அதே சமயம் 2023-ம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனை செய்துள்ள நிலையில், சிறுபட்ஜெட் படங்கள் பல விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.

Advertisment

அந்த வகையில் 2023-ம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் சினிமா பட்டியலை பார்ப்போம். 

லியோ – விஜய் – லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயரான 2-வது படம் வியோ. ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 19-ந் தேதி வெளியான இந்த படம் பான்- இந்தியா படமாக வெளியானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் எல்.சி.யூ வரிசையில் வருமா என்ற பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலகளவில் ரூ.620 கோடிக்கு மேல் வசூல் செய்து 2023ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உருவெடுத்துள்ளது.

ஜெயிலர் – ரஜினிகாந்த் – நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் பான்-இந்தியா வெளியீடாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. ரஜினிகாந்த் ரசிகர்களை திருப்தி படுத்திய 'ஜெயிலர்' ரூ 615 முதல் 620 கோடி வரை வசூலித்தது, மேலும் இது 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 – விக்ரம் – ஜெயம்ரவி - மணிரத்னம்

'பொன்னியின் செல்வன் 2' கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்த படம் முதல் பாகத்தின் அளவுக்கு வெற்றியை குவிக்கவில்லை. இருப்பினும், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்தது, மேலும் இது 2023 இன் மூன்றாவது அதிக தமிழ் வசூல் சாதனை படைத்தது.

வாரிசு – விஜய் – வம்சி பைடிபள்ளி

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய நடித்து பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் வாரிசு. காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் நிறைந்த 'வாரிசு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'வாரிசு' சுமார் 310 கோடி ரூபாய் வசூலித்தது, மேலும் படத்தை விஜய்யின் அதிக வசூல் செய்த படம் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். ஆனால் இந்த சாதனையை 'லியோ' முறியடித்தது.

துணிவு – அஜித்குமார் – எச்.வினோத்

2023 பொங்கலுக்கு அஜித் நடித்த 'துணிவு' படம்  விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதியது. இரண்டு நட்சத்திரங்களும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸ் ஒரே நாளில் மோதிக்கொண்டனர். இது உண்மையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எச்.வினோத் இயக்கிய 'துணிவு' திரைப்படம் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் வாங்கிகள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூல் செய்தது. துணிவுஅஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த 5 வது தமிழ் படமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment