சர்வதேச சிறந்த திரைப்பட பிரிவில் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் இந்தியாவில் இருந்து மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் சர்வதேச சிறந்த திரைப்பட பிரிவில் இந்தியாவில் இருந்து மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைசெய்யப்பட்ட 27 படங்களில் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் இருந்து ஜல்லிக்கட்டு மட்டுமில்லமல், தி டிசிபிள், சகுந்தலா தேவி, ஷிகாரா, குஞ்சன் சக்சேனா, சபாக், ஏ.கே. வெர்சஸ் ஏ.கே., குலாபோ சிட்டாபோ, போன்ஸ்லே, சலாங், ஈப் அலே ஓ !, செக் போஸ்ட், அட்கன் சட்கன் , சீரியஸ் மென், புல்பூல், காம்யாப், தி ஸ்கை இஸ் பிங்க், சிந்து கா பர்த்டே மற்றும் பிட்டர்ஸ்வீட் உள்ளிட்ட படங்களும் இருந்தன.
ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்புவதற்கு ஜல்லிக்கட்டுவைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்ட ஜூரி போர்டு - ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகுல் ராவயில், படத்தின் கருப்பொருள், தயாரிப்புத் தரம் மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கம் ஆகியவற்றைப் பாராட்டினார். இது பற்றி அவர் கூறுகையில், “உண்மையில் இது மனிதர்களின் ராவாவான பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு படம். நாம் விலங்குகளைவிட மோசமானவர்கள். மனித உள்ளுணர்வு விலங்குகளைவிட மோசமானது. படம் பிரமாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு தயாரிக்கப்பட்டு இந்த படம் மிக நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. இதில் வெளிப்படும் உணர்ச்சிகள் நம் அனைவரையும் நகர்த்தின. லிஜோ மிகவும் திறமையான இயக்குனர். அதனால்தான் நாங்கள் ஜல்லிக்கட்டுவைத் தேர்ந்தெடுத்தோம்.” என்று கூறினார்.
இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கிய ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"