'ஜோவிகாவை குறை சொல்வது விஷமம்; விசித்ரா இப்படி செய்யலாமா?' பிரபல இசை அமைப்பாளர் காட்டம்
மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி தொடர்பான ஜோவிகா – விசித்ரா மோதலில் ஜேம்ஸ் வசந்தன் கருத்து

அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தான். ஆனால் அதை சொல்லும் விதம் வேறு என பிக்பாஸில் படிப்பு தொடர்பாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisment
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், போட்டி இப்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று கேட்கிறார்.
மேலும், ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன்.படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும். எனக்காக எவ்வளவோ முயற்சிகளை எங்க அம்மா எடுத்தாங்க, ஆனால் என்னால் முடியவில்லை இப்பொழுது அவங்க விட்டுட்டாங்க. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் ஜோவிகா கூறினார்.
Advertisment
Advertisements
இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார்.
இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் 7 முதல் வாரத்திலேயே ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. வனிதா விஜயகுமாரின் 18 வயது மகள் ஜோவிகா 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதுவே அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்துள்ளது. படிப்பு வரவில்லை. கூடவே, இவர் நன்றாகப் படிக்கும் பிற மாணவருடன் ஒப்பிடப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் படிப்பின் மீது வெறுப்பும் வந்து அத்தோடு நிறுத்திவிட்டார். அவர் வளர்ந்த கடுமையான இளம் பருவத்துச் சூழலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
சமையல் கலையைப் படிக்கவும், நடிக்கவும் விரும்புகிற இவரைப் பிறர் படிக்கச் சொல்லி அறிவுரை சொல்லும்போது சினமடைகிறார். பலர் இப்படியே போதனை வழங்கியிருப்பார்கள் போல. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பேசுவதையே விரும்பாத அவரை இந்நிகழ்ச்சி சீண்டிவிட்டிருக்கிறது. உணர்வுகளின் அலைக்கழிப்பில் அவர் பேசிய அந்த நீண்ட பேச்சின் நடுவே அவர் சொன்ன "எல்லாருமே படிச்சு பெரிய ஆளாகணும்னு இல்லை" என்கிற ஒற்றை வரியை அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு, ஏதோ அவர் அடிப்படைக் கல்விக்கே எதிரி போலவும், கல்வியே தேவையில்லை என்று சொன்னது போலவும் பேசுவது விஷமம்.
மனித சமூகத்தில் மிக மலிவாகக் கிடைக்கும் ஒன்றே ஒன்று அறிவுரைதான். அதைச் சொல்லும் விதத்தில் பக்குவமாகச் சொன்னால் மட்டுமே உரிய பலனை அளிக்கும். அந்த நிகழ்ச்சியில் விசித்ரா சொன்னதுபோல் சொன்னால் இப்படி எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும். அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பது பண்பட்ட மனித சமூகம் உணர்ந்த ஒன்று. இதை எல்லாரும் அறிவர்.
இந்நிலையில், இக்கருத்தை ஆவேசமாகச் சொல்ல முயன்ற விசித்ராவின் அணுகுமுறையே அடிப்படைத் தத்துவத்தை விவாதத்துக்கு இடமாக்கி விட்டது. விசித்ராவின் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முழுக்க முழுக்கச் சரி. ஆனால், வெளிப்படுத்திய விதம் முழுக்கத் தவறு. இந்த வயதில், இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு உங்கள் சொல்லிலும், செயலிலும், உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லையென்ற நிலையில் நீங்கள் எப்படி இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லமுடியும்? ஒரு நல்ல அறிவுரையைச் சொல்கிறேன் என்று பிறர் மனம் நோகும் அளவுக்கா சொல்வது? மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? என ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
'ஜோவிகாவை குறை சொல்வது விஷமம்; விசித்ரா இப்படி செய்யலாமா?' பிரபல இசை அமைப்பாளர் காட்டம்
மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி தொடர்பான ஜோவிகா – விசித்ரா மோதலில் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி தொடர்பான ஜோவிகா – விசித்ரா மோதலில் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
ஜோவிகா விஜயகுமார் மற்றும் விசித்ரா
அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தான். ஆனால் அதை சொல்லும் விதம் வேறு என பிக்பாஸில் படிப்பு தொடர்பாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், போட்டி இப்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று கேட்கிறார்.
மேலும், ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன்.படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும். எனக்காக எவ்வளவோ முயற்சிகளை எங்க அம்மா எடுத்தாங்க, ஆனால் என்னால் முடியவில்லை இப்பொழுது அவங்க விட்டுட்டாங்க. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் ஜோவிகா கூறினார்.
இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார்.
இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் 7 முதல் வாரத்திலேயே ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. வனிதா விஜயகுமாரின் 18 வயது மகள் ஜோவிகா 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதுவே அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்துள்ளது. படிப்பு வரவில்லை. கூடவே, இவர் நன்றாகப் படிக்கும் பிற மாணவருடன் ஒப்பிடப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் படிப்பின் மீது வெறுப்பும் வந்து அத்தோடு நிறுத்திவிட்டார். அவர் வளர்ந்த கடுமையான இளம் பருவத்துச் சூழலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமையல் கலையைப் படிக்கவும், நடிக்கவும் விரும்புகிற இவரைப் பிறர் படிக்கச் சொல்லி அறிவுரை சொல்லும்போது சினமடைகிறார். பலர் இப்படியே போதனை வழங்கியிருப்பார்கள் போல. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பேசுவதையே விரும்பாத அவரை இந்நிகழ்ச்சி சீண்டிவிட்டிருக்கிறது. உணர்வுகளின் அலைக்கழிப்பில் அவர் பேசிய அந்த நீண்ட பேச்சின் நடுவே அவர் சொன்ன "எல்லாருமே படிச்சு பெரிய ஆளாகணும்னு இல்லை" என்கிற ஒற்றை வரியை அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு, ஏதோ அவர் அடிப்படைக் கல்விக்கே எதிரி போலவும், கல்வியே தேவையில்லை என்று சொன்னது போலவும் பேசுவது விஷமம்.
மனித சமூகத்தில் மிக மலிவாகக் கிடைக்கும் ஒன்றே ஒன்று அறிவுரைதான். அதைச் சொல்லும் விதத்தில் பக்குவமாகச் சொன்னால் மட்டுமே உரிய பலனை அளிக்கும். அந்த நிகழ்ச்சியில் விசித்ரா சொன்னதுபோல் சொன்னால் இப்படி எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும். அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பது பண்பட்ட மனித சமூகம் உணர்ந்த ஒன்று. இதை எல்லாரும் அறிவர்.
இந்நிலையில், இக்கருத்தை ஆவேசமாகச் சொல்ல முயன்ற விசித்ராவின் அணுகுமுறையே அடிப்படைத் தத்துவத்தை விவாதத்துக்கு இடமாக்கி விட்டது. விசித்ராவின் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முழுக்க முழுக்கச் சரி. ஆனால், வெளிப்படுத்திய விதம் முழுக்கத் தவறு. இந்த வயதில், இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு உங்கள் சொல்லிலும், செயலிலும், உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லையென்ற நிலையில் நீங்கள் எப்படி இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லமுடியும்? ஒரு நல்ல அறிவுரையைச் சொல்கிறேன் என்று பிறர் மனம் நோகும் அளவுக்கா சொல்வது? மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? என ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.