Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
Screen Logo
பொழுதுபோக்கு

டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது; சங்கீத உலகம் இரண்டாக பிரிவதற்கு காரணம் வேறு; ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்

பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர் டி.எம்.கிருஷ்ணா; சங்கீத கலாநிதி விருது அறிவிப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் கருத்து

Written by WebDesk

பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர் டி.எம்.கிருஷ்ணா; சங்கீத கலாநிதி விருது அறிவிப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் கருத்து

author-image
WebDesk
21 Mar 2024 19:13 IST

Follow Us

New Update
james vasanthan tm krishna

பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர் டி.எம்.கிருஷ்ணா; சங்கீத கலாநிதி விருது அறிவிப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் கருத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' விருது அறிவிக்கப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளார்.

Advertisment

கர்நாடக இசையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ”பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில், “கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது. 

Advertisment
Advertisements

கிருஷ்ணா "மிகப்பெரிய ஞானஸ்தன்; அபாரமான கலைஞர்" என ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற சங்கீத உலகம் இந்த விருது விஷயத்தில் இரண்டாகப் பிரிகிறதென்றால் அது இசையின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகிறதுதானே? வேறென்ன பிரச்சனை?

அவருடைய சமூகநீதிப் பார்வையும், அதைப் பளீரென்று உரத்த குரலில் அஞ்சாமல் சொல்லும் இயல்புந்தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வரும் சில கோட்பாடுகள்தான் காரணம்.

"சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது; அதைக்களைய வேண்டும்.
சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்."
என்று அவர் வெளிப்படையாகக் சொன்னதுதான் இசை உலகத்தில் பெரிய பூதத்தைக் கிளப்பிவிட்டு, பாரம்பரியத்தை உலுக்கி, பலரது சினத்தைத் தூண்டியது.

யாரை மேல்மட்டச் சமூகம் தீண்டாமல் ஒதுக்கிவைத்ததோ அவர்களோடு சேர்ந்து ஆல்காட் குப்பத்திலும், சேரிகளிலும் கர்நாடக இசையை எளிமைப்படுத்திப் பாடினார். மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து ஒரு கச்சேரி நடத்தினார். 
இதைப்போல பல கலை-கலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து செய்கிறார். 

21-ம் நூற்றாண்டு பாரதியைப் பார்ப்பது போல் இருக்கிறதா? 
இவரும் பிராமணர்தான்! 
ஆனால் பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர். 

இன்றைய சங்கீத உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிற இசை விழாவைப் புறக்கணிப்பதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
அந்த அறிக்கையில் இப்படிச் சொல்கின்றனர் - "

He has caused immense damage to the Carnatic music world, wilfully and happily stomped over the sentiments of this community and insulted most respected icons like Tyagaraja and MS Subbulakshmi." (அவர் கர்நாடக இசை உலகிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே மற்றும் மகிழ்ச்சியுடன் இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார்.")

'Sentiments of this community' என்பது என்னவாக இருக்கும்?
அடுத்து அவர்கள் சொல்கிறார்கள் - 
"It is dangerous to overlook Mr TM Krishna’s glorification of a figure like EVR aka Periyar who 
1. Openly proposed a genocide of ‘brahmins’
2. Repeatedly called/abused every woman of this community with vile profanity
3. Relentlessly worked to normalize filthy language in social discourse (1. ‘பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக முன்மொழிந்தது
2. இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்தது/துஷ்பிரயோகம் செய்தது
3. சமூகச் சொற்பொழிவில் இழி மொழியை இயல்பாக்க இடைவிடாமல் பாடுபட்ட
ஈ.வெ.ரா போன்ற பெரியாரைப் போற்றிய திரு டி.எம்.கிருஷ்ணாவைப்  பாராட்டுவது ஆபத்தானது) டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாராம். அதனால் அவர் ரொம்ப ஆபத்தானவராம்.

பாடகி சின்மயி இவர்களது அறிக்கைக்கு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார். 
"ஆன்மீகத்தின், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களே... இதே சங்கீத உலகில் பல பெரிய மனிதர்கள், வித்வான்கள் தங்களிடம் இசை பயில வரும் பல குழந்தைகளின் கற்பை சூறையாடுகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று 'Me Too' இயக்கத்தில் நாங்கள் குரலெழுப்பி கூக்குரலிட்டபோது எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தீர்களே. அப்போது உங்கள் பொறுப்பும், அக்கறையும் எங்கே போனது?" என்று கேட்டிருக்கிறார். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு...

Posted by James Vasanthan on Thursday, March 21, 2024

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tm Krishna

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!