போட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ

Serial Actress Janani ashok kumar’s latest photo shoot Tamil News: சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்திய நடிகை ஜனனி அசோக் குமார், அப்போது நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டு உள்ளார்.

Janani ashok kumar Tamil News: serial actress Janani ashok kumar’s latest photo shoot

Janani ashok kumar Tamil News: வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். அதில் நடிகை ஜனனி அசோக் குமாரும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.

ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். இருப்பினும் அவரை கவனிக்க வைத்தது என்னவோ, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியல் தான். இந்த சீரியலில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தார்.

ஜனனி அசோக் குமார் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் சரண்யா என்கிற ரோலில் நடித்து வருகிறார். முன்பு நடித்த சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்தது போலவே இதுவும் ஒரு முக்கியமான ரோல் ஆகும்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தவிர, ஒரு மேக்கப் ஆர்டிஸ்டும் கூட. அதோடு ஃபேஷன் டிஸைனிங்கும் செய்து வருகிறார். மேலும் ஒய்வு நேரங்களில் தன்னை பிசியாக வைத்திருக்க போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் ஜனனி சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அவரே வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டும் உள்ளார். அதில் ஜனனி, காலில் ஹீல்ஸ் அணிந்துகொண்டு சிறிய சுவர் மீது ஏறி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியாமல் அவர் தடுமாறி கீழே விழ செல்கிறார். அப்போது கேமரா வைத்திருக்கும் நபர் அவரை தாங்கி பிடிக்கிறார். இணைய பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இணைய வாசிகள் கலாய்த்து வருகிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Janani ashok kumar tamil news serial actress janani ashok kumars latest photo shoot

Next Story
Vijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express