இந்தி சினிமாவில் தற்போது முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தனது அறையில், ஒரு பையனை ஒளித்து வைத்திருந்ததாகவும், அப்பா போனி கபூர் வந்தவுடன், அந்த பையனை முதல் மாடியில் இருந்து கீழே இருந்த தனது காரில் குதிக்க சொன்னதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மூத்தமகள் ஜான்வி கபூர். இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது ராம்சரனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமா ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அதேபோல், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவாரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். கொரட்டாலா சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க : Janhvi Kapoor asked a boy to jump out her first floor window, was caught by dad Boney Kapoor: ‘That’s when he put the grill’
இதனிடையே ஜான்வி கபூர் இந்தியில் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி திரைப்படம், வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஜான்வி கபூர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மஷபில் இந்தியா என்ற யூடியூப் சேனலில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், மும்பையில் எனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீட்டில் நாங்கள் இருக்கும்போது, “நான் ஒரு பையனுடன் ஒருமுறை முதல் மாடியில் உள்ள எனது அறையில் பதுங்கிக்கொண்டேன். அந்த நேரத்தில் எனது அப்பா வந்துவிட்டதால், அந்த பையனை, கீழே இருந்த என உயரமான கார், லெக்ஸஸில் குதிக்க சொன்னேன். அவரும் அப்படியே செய்தார்.
இந்த காட்சியை எனது அப்பா சிசிடிவியில் பார்த்துவிட்டார். மேலும் அவர் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்பது போல் இருந்துவிட்டு, மறுநாள் என் அறையில் ஜன்னலுக்கு கிரிலை கொண்டு வந்து மாட்டிவிட்டார். அதில் இருந்து யாரும் வெளியில குதிக்க முடியாது. மேலும் நான் அந்த பையனை எனது காரில் குதிக்க சொன்னபோது. அந்த காரில், என் டிரைவர் அமர்ந்திருந்தார். அதை நான் கவனிக்கவில்லை என்று கூறிய ஜான்வி கபூர் அந்த பையனின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.
மேலும் தனது தந்தை பற்றி கூறிய ஜான்வி கபூர் ஒருமுறை எனது தந்தை போனி கபூர் எனது தாய் ஸ்ரீதேவியை பார்க்க முயன்றபோது ஹோட்டல் ஜன்னல் வழியாக குதித்து சென்றுள்ளார். அப்படி அடிக்கடி இதை பற்றி எங்களிடம் சொல்வார். ஒவ்வொரு நாள் இரவும் 10 மணிக்குப் பிறகு, பழைய நாட்கள் மற்றும் அவற்றின் நினைவுகளை பற்றி பேச அப்பா விரும்புவார். இது அவருக்கு மிகவும் “பிடித்த விஷயம்” .
"ஒவ்வொரு நாள் இரவும், 10 மணிக்குப் பிறகு, மியூசிக் சேனல்கள் பழைய பாடல்களை கேட்க தொடங்கும் போது, அப்பா என்னைப் பார்த்து, 'உனக்கு தெரியும், உன் அம்மாவும் நானும்...' என்று சொல்வது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்," என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார். 1996-ம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி 2018-ம் ஆண்டு துபாயில் மரணமடைந்தார். திருமணமானது முதல் 22 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“