நடிகை ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் ‘தடாக்’ படத்தில் ஜான்வியின் நடிப்பு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவரின் இறப்பு சினிமா உலகிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு என்றே கூறலாம். தமிழில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் தெலுங்கு, மலையாளம் வரை பறந்து விரிந்து பாலிவுட்டில் நிறைவடைந்தது.
இறுதியாக இவர் நடித்திருந்த ’மாம்’ திரைப்படம்,இறந்த பின்பு தேசிய விருதை பெற்று தந்தது. ஸ்ரீதேவியின் இறப்புக்கு பிறகு அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமானர். ஜான்வியின் முதல் படத்தை தேர்ந்தெடுத்தது அவரின் அம்மா ஸ்ரீதேவி தான். மராத்தியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘சாய்ராட்’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ஜான்வி கபூரை அறிமுகம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-70.jpg)
ஆனால், அவரின் முதல் திரைப்படம் வெளியாவதற்குள் ஸ்ரீதேவி மறைந்து விட்டார். அதன் பின்பு ஜான்வி மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த வாரம் ’தடாக்’ படம் வெளியானது. படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக கலவையான பதில்களை பெற்றிருந்தாலும் நடிகை ஜான்வியின் நடிப்பு தான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காரணம், ஜான்வி நடிப்பு ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. ஜான்விக்கு இது அறிமுக படம் என்பதையே மறந்து விட்ட பலர் அவர் ஸ்ரீதேவியை திரையில் சிறிதளவும் ஞாபகப்படுத்தவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை திரையரங்கு சென்று ரசிகர்களோடு பார்த்த ஜான்வியின் தங்கையும் ஸ்ரீதேவியிப் இளைய மகளான குஷி கபூர் அவரின் அக்காவை கட்டி அணைத்து அழுதுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-71-1024x576.jpg)
மேலும், ஜான்வியிடம் “உண்மையாகவே நீ அற்புதமாய் நடித்துள்ளாய். உன்னை திரையில் பார்க்க பெருமையாக உள்ளது அக்கா” என்று கண்ணீருடன் அழுதுள்ளார். அதே போல் தந்தையும், படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர் ஜான்வியின் நடிப்பு தனக்கு பிடித்துள்ளது என்றும், ஸ்ரீதேவியுடன் அவரை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.