Janhvi Kapoor: நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘ த ஸ்கை இஸ் பிங்க்’ படத்தின் சிறப்பு திரையிடலுக்கு ஸ்டன்னிங்காக வந்திருந்தார் நடிகை ஜான்வி கபூர்.
தமிழில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.ஜிம், ஷாப்பிங், பார்ட்டி என எல்லாவற்றையும் என்ஜாய் செய்துக் கொண்டிருக்கும் ஜான்வி கபூர் ’தடாக்’ படத்திற்குப் பிறகு பல வித்தியாசமான வேடங்களில் நடிக்கப் போகிறார்.அவரது படங்களைத் தவிர, ஜான்வி கபூரின் ஸ்டைலும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்றிரவும் இதுபோன்ற ஒரு நேரம் அமைந்தது.பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் ஃபர்ஹான் அக்தரின் ’தி ஸ்கை இஸ் பிங்க்’ பட திரையிடலில் ஜான்வி கலந்துக் கொண்டார். அப்போது, சூப்பர் கூல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். பச்சை கார்கோ பேண்ட், வெள்ளை டி-சர்ட், வெள்ளை ஷூவுடன், ஸ்லிங் பையை மேட்ச் செய்திருந்தார்.அவ்வப்போது ஆடை சர்ச்சைகளில் சிக்கி, சமூக வலைதளங்களில் ட்ரோலுக்கு ஆளாக்கப்படுவார் ஜான்வி கபூர். அவருக்கு ஷூஸ் என்றால் கொள்ளை விருப்பமாம்.இதற்கிடையே ஜான்வியின் கைகளில் ஐந்து படங்கள் உள்ளன. நகைச்சுவை திகில் படமான ’ரூஹி அஃப்ஸா’வில் ராஜ்கும்மர் ராவுக்கு ஜோடியாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டைட்டில் ரோலில் நடிக்கிறார். நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படமான கோஸ்ட் ஸ்டோரீஸில் ஜோயா அக்தர் இயக்கும் பகுதியிலும் ஜான்வி நடிக்கிறார். மேலும், கரண் ஜோஹரின் பீரியட் ஃபிலிமான ’தக்தில்’அடிமைப் பெண்ணாக, கார்த்திக் ஆர்யன் மற்றும் லக்ஷ் லால்வானி ஆகியோருடன் நடிக்கிறார்.