மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், பராம்பரிய புடவை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெரும்பாலும் ஜான்வி கபூர், பளபளப்பான லெஹெங்காக்கள், பிரமிக்க வைக்கும் புடவைகள் மற்றும் சூட் செட்டுகளை அணிந்திருப்பார் – இவை அனைத்தும் புக்மார்க் செய்ய வேண்டியவை. அவை பொதுவாக பிரபல டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளாக தான் இருக்கும்.
இந்நிலையில் தற்போது, ஜான்வி கபூர் இலையுதிர்/குளிர்கால ஃபேஷனின் நியூட்ரல் பேலட்-டுக்கான சரியான அண்டி-டோட்டாக இருக்கும் ஃப்ளோரல் புடவையில் மற்றொரு நேர்த்தியான தோற்றத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிரபல ஸ்டைலிஸ்ட் மோஹித் ராய் பாணியில், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுடன், ஆர்கன்சாவில் இளஞ்சிவப்பு மலர் அச்சிடப்பட்ட, ரா மாம்பழப் புடவையில் ஜான்வி ரொமாண்டிக்காக இருக்கிறார். அதில் கூந்தலை அவிழ்த்துவிட்டு, தனது சிக்னேட்சர் லுக்கான, லேசான ஐ மேக்கப், நியூட் லிப்ஸ்டிக் உடன் ஒரு சிறிய கருப்பு பொட்டு வைத்து பார்ப்பதற்கு சிம்பிளாகவும், அதேநேரம் எலிகெண்ட் ஆகவும் இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர், புடவையில் ஜான்வி கபூர் அவர் அம்மா ஸ்ரீதேவியை போன்று இருப்பதாக கூறிவருகின்றனர்.
இந்த தோற்றம், 90களின் பாலிவுட் கவர்ச்சிக்கு த்ரோபேக் ஆக இருந்தது. ஜான்வி, தனது பாரம்பரியத்தை எவ்வளவு சிரமமின்றி எடுத்துச் செல்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஜான்வியின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர், தனது அடுத்த படமான வலிமை-யை ஜனவரி 2022 இல் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரு அழகான பிரமிக்க வைக்கும், சிக்கலான எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வயலிட் நிற அனாமிகா கண்ணா அனார்கலியில் ஜான்வி தேவதை போல இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “