பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த தென்னிந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகளாள ஜான்வி கபூர், தனக்கு திருப்பதி வெங்கடாலஜலபதி முன் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம், பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் படத்தில், ஜான்வியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதனிடையே, முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜான்வி கூறியதாவது, நான் பாதி தென்னிந்தியா பாதி பஞ்சாபி பொண்ணு. எனக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மீது அளவுகடந்த ஈடுபாடு உண்டு. எனது திருமணம், இந்த திருப்பதி தலத்தில், பாரம்பரிய முறைப்படியே நடைபெறும் என்று கூறியுள்ளார்.