Advertisment

முன்னாள் முதல்வர் பேரனுடன் டேட்டிங்... ஜான்வி கபூர் போட்டோஸ் லீக்

ஷிகரும் ஜான்வியும் சிறிது காலம் டேட்டிங் செய்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor rare public appearance with boyfriend Shikhar Pahariya

பாய் ப்ரண்ட் ஷிகருடன் நடிகை ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் ஸ்டாருமான ஜான்வி கபூர், சனிக்கிழமை (டிச.17) பொதுவெளியில் ஷிகர் பஹரியாவுடன் தோன்றினார்.

அதாவது, க்ரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2022 விழாவில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இது தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேள்விக் கணைகளை தொடுத்துவருகின்றனர்.

Advertisment

தொடர்ந்து ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில், வருண் தவான், ஷனாயா கபூர், அப்து ரோசிக் மற்றும் ஷிகர் பஹாரியா ஆகியோர் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதில், இதய ஈமோஜியுடன் "மா செரி" என்று ஷிகர் எழுதியிருந்தார். இந்தப் பிரெஞ்ச் பிரெஞ்சு வார்த்தையின் ஆங்கில அர்த்தம் ‘மை ஸ்வீட்ஹார்ட்’. தமிழில் என் அன்பு இதயம் என்பதாகும்.

இந்த மாத தொடக்கத்தில், ஜோடியினர் மாலத்தீவில் சுற்றியுள்ளனர். அவர்கள் கடற்கரையில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்திருந்தனர்.

ஜான்வி கபூரின் இதயம் கவர்ந்த ஷிகர், மராட்டிய முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். மேலும், ஷிகரும் ஜான்வியும் சிறிது காலம் டேட்டிங் செய்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment