நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி திரைப்படம் மே 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஜான்வி கபூர், “தனது தாய் ஸ்ரீதேவியின் எதிர்பாராத மரணத்தில் கொடுத்த வலி வேதனையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன்” என்பதை பேட்டியின்போது பகிர்ந்துக் கொண்டார்.
இது குறித்து அவர், “எனது தாய்க்கு சில நம்பிக்கைகள் இருந்தன. வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது; கறுப்பு ஆடைகள் அணியக் கூடாது” என்பன போன்ற அந்த நம்பிக்கைகள் நீளும். ஆனால் எனக்கு இந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது.
அம்மாவின் மறைவுக்கு பின்னர் நான் அவரை அதிகம் நம்பினேன். இது நம்பிக்கையா, ஆன்மிகமா எனத் தெரியாது. அவரின் மறைவுக்கு பின்னர் எனக்கு ஆன்மிக தேடல்கள் அதிகம் வந்தன” என்றார்.
தொடர்ந்து, திருப்பதி வெங்கடலாசலப்பதி சுவாமி குறித்து பேசிய நடிகை ஜான்வி கபூர், “நாராயணா, நாராயணா, நாராயணா என அவரின் திருமந்திரத்தை நான் உச்சரிப்பேன்.
என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் நான் திருப்பதி செல்வேன். நான் அங்கு செல்லும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவேன். எனது மனதுக்கு மிகுந்த அமைதி கிடைக்கும்” என்றார்.
மேலும் தனது தாயின் மரணம் கொடுத்த வலியில் இருந்து இன்னமும் மீண்டு வரவில்லை; மக்கள் எனது தாயின் மரணம் பற்றி தொடர்ந்து கேட்கிறார்கள். இது ஏன் என முதலில் நினைத்தேன்.
எனது வேலையின் மூலம் யதார்த்தத்தை உணர்ந்துக் கொள்கிறேன். தற்போது புததுணர்ச்சி உடன் உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து, “அம்மா எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். இது எனக்கு நல்ல உணர்வை தருகிறது. அம்ம எங்கோ பயணிக்கிறார்; அவர் திரும்பி வருவார்” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Janhvi Kapoor reveals she became more religious, superstitious after Sridevi’s death; admits she still hasn’t accepted her mother’s absence: ‘I think she’s travelling’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“