/indian-express-tamil/media/media_files/gkGhJMYJp2EcvPj54HLO.jpg)
Janhvi Kapoor Speaks in Tamil Fluently
Janhvi Kapoor Speaks in Tamil- இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா' திரைப்படம், வருகிற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதையொட்டி சென்னையில் நேற்று நடந்த ப்ரோமோஷனில், ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், ஜான்வி கபூர் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
Thangam ❤️❤️❤️ #Devarapic.twitter.com/hrf6iLdwoo
— Devara (@DevaraMovie) September 17, 2024
அவர் பேசுகையில், `எனக்கு எங்க அம்மாவோட இருந்த சிறந்த நினைவுகள் எல்லாமே சென்னைலதான். அன்னைக்கு நீங்க எங்க அம்மா மேல காட்டுன அன்புதான் இன்னைக்கு நானும் என்னுடைய குடும்பமும் நல்ல நிலைமைல இருக்கிறதுக்கு காரணம். அதுக்கு நான் என்னைக்கும் கடமைப்பட்டிருக்கேன். அதே அன்பை எனக்கும் கொடுப்பீங்கனு நம்புறேன். இ`ந்தப் படத்துக்கு என்னுடைய உழைப்பை அதிகமா கொடுத்திருக்கேன். தேவாரா எனக்கு ஸ்பெஷலான படம்" என்றார்.
ஜான்வி இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதை பார்த்த ரசிகர்கள், ஜான்வியை கோலிவுட்டில் இறக்கிவிடுங்க என்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.