நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், 2018 ஆம் ஆண்டு தடக் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர், கோஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் மூலம் ரசிகர்களை மனதை வென்றெடுத்து பிரபலமானார். தற்போது, தமிழில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று(மார்ச்.6), அவர் தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதற்கிடையில், தனது பிறந்தநாளை கொண்டாடிய ஜான்வி, நண்பர்கள், உறவினர்களுடன் திருப்பதி சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது, ஜான்வி புடவையில் எடுத்த கண்கவரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இதுதவிர, விமான நிலையம் வந்த ஜான்வி, தனது ரசிகர் கொண்டு வந்த கேக்கை வெட்டும் காணொலியும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, ஜான்வியின் பழைய புகைப்படத்தை பகிர்ந்த போனி கபூர், “எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி நீ, இவ்வுலகில் எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே இருங்கள், எளிமையானவர், எல்லோரிடமும் மரியாதை அளிப்பவர், அன்பை பரப்புவது போன்ற குணங்கள், உங்களை நிலவை தாண்டி அழைத்து செல்லும். பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார். குஷி கபூரும் ஜான்வியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கையில், “என்னுடைய எல்லாமே நீ தான்” என பதிவிட்டிருந்தார்.
ஜான்வியின் நடிப்பில் தோஸ்தானா 2, குட் லக் ஜெர்ரி மற்றும் மிலி ஆகிய படங்கள், வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி வைக்கும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில், ஜான்வி பாரம்பரிய உடையில் வெங்கடேஷ்வர் சுவாமியின் ஆசிர்வாதத்தை தரிசனத்திற்கு சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil