/indian-express-tamil/media/media_files/2025/03/30/FlXmEyJJMoXQCb2bDZAB.jpg)
ஃபேஷன் ஷோவில் ஜான்வி கபூர் துள்ளல் ராம்ஃப் வாக்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், சனிக்கிழமை (மார்ச் 29) அன்று நடந்த (Lakme Fashion Week) லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், ஃபேஷன் டிசைனர் ராகுல் மிஸ்ராவின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கருப்பு நிற மாடல் உடையில் துல்லலாக ராம்ஃப் வாக் செய்து அசத்தினார். இதுதொடர்பான புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, நெட்டிசன்கள் உண்மையான மாடல் எங்கே? என கேள்வி எழுப்பி விமர்சித்தனர். ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் உண்மையான மாடல்களுக்கு வாய்ப்பளிக்குமாறு வலியுறுத்தினர்.
ஜான்வி கபூர் தன்னம்பிக்கையுடன் நடந்தாலும், அவரது ராம்ஃப் வாக் போட்டோஸ் நெட்டிசன்களுக்கு எரிச்சலூட்டுகிறது. இன்ஸ்டாகிராமில், ஒரு பயனர் "இது உண்மையான மாடல்களுக்கு அவமானம்" என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இதெல்லாம் நெப்போ எனும் குடும்ப வாரிசுகளுக்கு ஒரு புதிய விஷயமா?” என்று மற்றொரு பயனர் விமர்சித்திருந்தார்.
ஜான்வி கபூர் தனது ரேம்ஃப் வாக்கிற்காக விமர்சனங்களை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஃபாரிஸ் ஹாட் வீக் நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவுக்காக ஜான்வி நடந்தபோது அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், அந்த சந்தர்ப்பத்தில், நெட்டிசன்கள் அவரது நடையை 'தூக்கத்தில் நடப்பதுடன் ஒப்பிட்டு, மிகவும் மெதுவாக நடந்து கொண்டதற்காக அவரை ட்ரோல் செய்தனர்.
ஜான்வி கபூர் அடுத்து ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் . அவர் தற்போது சன்னி சன்ஸ்கரி கி துளசி குமாரி மற்றும் பரம் சுந்தரி ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.