Jahnvi Kapoor: ஜான்வி கபூர் தனது ஸ்டைலான ஜிம் லுக்கில் தினம் தினம் காட்சியளிக்கிறார். இஷான் கட்டாருடன் அவர் இணைந்து நடித்த முதல் படமான தடாக் ஜான்விக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், ரூஹி அப்சா, தக்த் மற்றும் தோஸ்தானா 2 ஆகிய 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜான்வி. விமான நிலையத்தில் பவுடர் ப்ளூ கலர் சல்வாரில் காட்சியளித்த அவர், அமிர்தசரஸில் தரையிறங்கினார்.


கோல்டன் சிட்டியில் இறங்கியவுடன் பாரம்பரிய பஞ்சாபி முறைக்கு மாறினார் ஜான்வி கபூர். ஒருவர் லஸ்ஸியைத் தயாரிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார் ஜான்வி. பாரம்பரிய பஞ்சாபி பானத்தை சுவைத்து விட்டு, அங்குள்ள கோல்டன் டெம்பிளுக்கும் விசிட் அடித்திருக்கிறார் ஜான்வி. இந்த விசிட் தனது தோஸ்தானா 2 படத்திற்காகவாம். அந்தப் படங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது.