அடிக்கடி ட்ரோல்ல சிக்குறாங்களே: ப்ரைஸ் டேக்குடன் துப்பட்டா அணிந்த ஜான்வி கபூர்!

Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அணிந்திருந்த துப்பட்டாவில் அதன் ப்ரைஸ் டேக் அகற்றப்படாமல் இருந்தது. வேறென்ன நெட்டிசன்களுக்கு ஏற்ற கண்டெண்டும் கிடைத்துவிட்டது! இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பிரகாசமான மஞ்சள் நிற சல்வாரில் இருந்தார் ஜான்வி. சிரித்துக் கொண்டே, தன் காரை நோக்கி, செல்வதற்கு முன்…

By: October 23, 2019, 12:40:17 PM

Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அணிந்திருந்த துப்பட்டாவில் அதன் ப்ரைஸ் டேக் அகற்றப்படாமல் இருந்தது. வேறென்ன நெட்டிசன்களுக்கு ஏற்ற கண்டெண்டும் கிடைத்துவிட்டது!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பிரகாசமான மஞ்சள் நிற சல்வாரில் இருந்தார் ஜான்வி. சிரித்துக் கொண்டே, தன் காரை நோக்கி, செல்வதற்கு முன் கேமராவுக்கு புன்னகைத்தார். ஜான்வி திரும்பிச் செல்கையில் ப்ரைஸ் டேகுடன் அவர் துப்பட்டா அணிந்திருப்பது தெரிய வருகிறது.

 

View this post on Instagram

 

#jhanvikapoor snapped at her pilates class today #viralbayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

எப்போதும் ஜான்வி கபூரின் உடைகளை மையப்படுத்தி நையாண்டி செய்து வரும் நெட்டிசன்களுக்கு இதுவும் கண்டெண்டாக மாறியது. தான் அனிந்திருக்கும் துப்பட்டாவின் விலையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே, ப்ரைஸ் டேகுடன் துப்பட்டா அணிந்திருக்கிறார் ஜான்வி என்றவாறு பல கமெண்டுகள் நெட்டிசன்களிடம் இருந்து பறந்தன.

ஆனால், ஜான்வியோ இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது படங்களில் பிஸியாக இருக்கிறார். கார்த்திக் ஆர்யன், புதுமுகம் லக்‌ஷயாவுடன் தான் நடிக்கும் தோஸ்தானா 2 திரைப்படத்தின் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஜான்வி. பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான படம் தான் தோஸ்தானா. அதன் தொடர்ச்சியாக தோஸ்தானா 2 உருவாகிறது. மேலும், ராஜ்குமார் ராவின் திகில் படமான ’ரூஹி அப்சா’வின் சில பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்டார் ஜான்வி. அதோடு போர் விமானியாக ‘தி கார்கில் கேர்ள்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Janhvi kapoor was wearing a dupatta with price tag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X