சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஜப்பான் நாட்டில் ரஜினியின் முத்து படம் வெளியாக இருக்கிறது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாகிறது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் வெளியாகும் முத்து படம் :
இந்நிலையில் 1995ம் ஆண்டு வெளியான முத்து படத்தை வெளியிட ஜப்பான் நாடு முடிவெடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ரசிகர்கள் ஜப்பான் நாட்டிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை ரஜினியின் படம் வெளியாகும்போதும் அவர்கள் ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்து ரஜினியின் படத்தை பார்ப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினிகாந்த்-ன் முத்து படத்தை, டேன்சிங் மகாராஜா என்ற தலைப்பு பெயர் கொண்டு புதுபித்து 4கே முறையில் வெளியிடுகிறார்கள். உலகம் முழுவதும் 29ம் தேதி 2.0 வெளியாகும் நிலையில், அதற்கு முன்னதாக 23ம் தேதியே முத்து படத்தை அவர்கள் வெளியிடுகிறார்கள்.
November 2018
இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து அவர்களுக்கு ரஜினிகாந்த் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளாராம். அதில் அனைவரும் படத்தை பார்த்து வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாராம். மேலும் இந்த வீடியோ படத்தின் காட்சி தொடங்குவதற்கு முன்பு ஒளிபரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளனர்.