Advertisment

சிறிய கேரக்டருக்கு தீபிகா நடித்தது ஏன்? ஜவான் குறித்து மனம் திறந்த இயக்குனர் அட்லீ

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு தீபிகா படுகோனை தேர்வு செய்தது குறித்து அட்லீ மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
Oct 28, 2023 17:54 IST
New Update
Deepika Padukone

ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கவனம் ஈர்த்தவர் தீபிகா படுகோனே

ஆங்கிலத்தில் படிக்க : Deepika Padukone didn’t understand why Shah Rukh Khan and Atlee personally came to pitch Jawan to her: ‘Why do you have to narrate?’

Advertisment

ஷாருக்கான் அட்லி கூட்டணியில் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் தீபிகா படுகோனே நடித்திருந்தது ஏன் என்பது குறித:து இயக்குனர் அட்லி கூறியுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தமிழ் இயக்குனர் அட்லி கூட்டணியில் வெளியான ஜவான் படம் உலகளவில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், வெளியாகி 50 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் காணப்படாத ஒரு நிகழ்வு. இந்தியாவில் ரூ.759 கோடி உட்பட, உலகளவில் ரூ.1,148 கோடி வசூலித்ததன் மூலம், ஜவான் திரைப்படம் தற்போது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், தீபிகா படுகோனே (அன்) இறுதியாக ஒரு கேமியோ ரோலில் வந்து அனைவரனை் கவனத்தையும் ஈர்த்தார், ஷாருக்கானின் விக்ரம் ரத்தோர் கேரக்டருக்கு மனைவி ஐஸ்வர்யாவாகவும், ஆசாத்தின் அம்மாவாகவும் சிறப்பாக நடித்து தீபிகா பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இதனிடைய தீபிகாவை அந்த கேரக்டரில் நடிக்க வைப்பதில் தனது அணுகுமுறை மற்றும் படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து அவரை சந்திக்க சென்றபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து சமீபத்தில் அட்லி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஜவான் படத்தில் தீபிகாவைக் கொண்டுவருவது பற்றி முதலில், ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியுடன் பேசினேன். அவர் தான் ஷாருக்கான் மூலம் தீபிகாவை அணுகுமாறு என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் ஷாருக்கானை இது குறித்து பேசுவதற்கு முன்பே அவர், தீபிகாவை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு நான் ஷாருக்கானிடம் இது பற்றி பேசும்போது, நான் அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டேன்; அவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அவர் ஓய்வாக இருக்கும்போது படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து பேசுவோம். படத்தின் அவரின் கேரக்டர் முக்கியத்துவம் தெரிந்துகொண்டு நிச்சயமாக சிறப்பாக செய்வார் என்று கூறினார்.

இதை கேட்டு எனக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்று தீபிகாவை சந்தித்தோம். அவர் கல்கி 2898 AD படப்பிடிப்பில் இருந்தார். தொடர்ந்து அவருடைய ஹோட்டலுக்குச் சென்று இரண்டு முதல் மூன்று மணி நேரம் பேசினோம் அவர் ஏற்கனவே இந்த படத்தில் இணைய ஆர்வமாக இருந்ததால், ஆரம்பத்தில் படத்தின் ஸ்கிரிப்டைக் கேட்க தயங்கினார். ஆனால் நான் இது ஒரு சிறிய கதாபாத்திரம் அல்ல, அது படத்தின் மைய தூண், அதைச் செய்வதற்கு முன் அந்த கதாபாத்திரத்தை அவள் அறிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

ஜவான், ஜவான் திரைப்படம், ஜவான் இயக்குனர், அட்லீ, அட்லீ குமார், அட்லீ குமார் ஜவான், தீபிகா படுகோன், தீபிகா படுகோனே ஜவான், ஷாருக் கான்

அதன்பிறகு அவர் ஸ்கிரிப்ட் குறித்து கேட்டார். அதைக் கேட்டதும், ‘அட, இது ரொம்ப வலிமையான கேரக்டர் என்று கூறிவிட்டு மரியாதையுடனும், அன்புடனும், மிகவும் நேர்மறையாகவும், அவர் ஜவான் குழுவுடன் இணைந்தார். தீபிகாவுடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் நேரம் கிடைத்தது. உணர்ச்சிகளை மிகவும் வலிமையாக வெளிப்படுத்தும்  தீபிகா டைலாக் பேசுவதை விட கண்களால் அதிகம் பேசுவார். அதனால் நான் எப்பொழுதும் அவருக்கு க்ளோசப் ஷாட் வைக்க வேண்டும் என்று நினைப்பேன். சிறந்த கண்களைக் கொண்ட அவர், தனது கண்களால் காட்சியைப் சிறப்பாக செய்வார்.

"அவருடன் பணிபுரிய மிகவும் அற்புதமான நடிகர் என்பதால் நான் அவருடைய நிறைய வசனங்களை எடிட் செய்தேன். உதாரணமாக, அந்தப் படத்தில் வரும் சிறைக் காட்சியில் மதுக்கடை அருகே வந்து, “விக்ரம் கஹான் ஹை?” என்று கேட்பார். அந்த காட்சியில் அவர் பேசுவதற்கு முன், அவளுடைய கோபத்தை நீங்கள் உணரலாம். அவர் ஆக்ரோஷமாக விக்ரம் பற்றி கேட்கிறாள். இந்த காட்சியை அவர் ஒரே டேக்கில் செய்தார். அவருக்குள் நிறைய விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று அட்லி குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
#Deepika Padukone #Atlee #Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment