Advertisment

ஜவான் படத்தின் ரூ300 கோடி பட்ஜெட்டை மீறிய அட்லீ; ஆதரவு அளித்த ஷாரூக் கான்

கோவிட் சமயத்தில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் படங்களுக்கு ரூ. 30 கோடி கூட வழங்கத் தயங்கியபோது, ஜவானுக்காக ரூ.300 கோடி பட்ஜெட்டுக்கு ஷாருக்கான் ஒப்புதல் அளித்தார் - இயக்குனர் அட்லீ

author-image
WebDesk
New Update
atlee and Shah rukh khan

ஜவான் நிகழ்ச்சியில் ஷாருக்கானுடன் அட்லீ.

இயக்குனர் அட்லீயின் ஜவான் திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் 735 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஜவான் நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர், மும்பையில் வெள்ளிக்கிழமை ஊடக நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில், ஷாருக் கான் மற்றும் தீபிகா ஆகியோர் மேடையில் படம் பற்றிய புதிய விவரங்களையும் வெளியிட்டனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Jawan director Atlee admits he overshot allocated budget of Rs 300 crore, thanks Shah Rukh Khan for accommodating cost overrun

இந்த விழாவில் கலந்து கொண்ட அட்லீ, படத்தின் பட்ஜெட் குறித்து விளக்கம் அளித்தார்.கோவிட் காலங்களில் நான் படத்தை ஜூம் காலில் விவரித்தேன். திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நான் அறிந்திருந்தேன், 30-40 கோடி ரூபாய் மதிப்பிலான படத்தைக் கூட மக்கள் திரையரங்குகளில் பார்க்க தயாராக இல்லை. நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் எனக்கு தெரியும். ஆனால் எல்லோரும் சந்தேகமாக பார்த்த நிலையில், ஷாருக்கான் ரூ. 300 கோடி படத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்,” என்று அட்லீ கூறினார். மேலும் சிரித்தபடி, “ஆனால் நாங்கள் 300 கோடியில் படத்தை முடிக்கவில்லை. பட்ஜெட் அதிகமானது. ஆனால் நாங்கள் மூன்று நாட்களில் பிளாக்பஸ்டர் செய்துள்ளோம், இப்போது நாங்கள் பறக்கிறோம், என்றும் அட்லீ கூறினார். அட்லீ, ரெட் சில்லிஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, ஷாருக்கின் மேலாளர் பூஜா தத்லானிக்கு சிறப்பு நன்றியையும் தெரிவித்தார். "இது குடும்பத்துடன் வேலை செய்வது போன்றது," என்று அட்லீ கூறினார்.

ஒன்பதாவது நாளில், ஜவான் ரூ.21 கோடி சம்பாதித்து, மொத்த உள்நாட்டு நிகர வசூலை ரூ.410.88 கோடியாகக் கொண்டு வந்தது. முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்து, முதல் வெள்ளியன்று ரூ.53.23 கோடியும், முதல் சனிக்கிழமை ரூ.77.83 கோடியும், முதல் ஞாயிறு அன்று ரூ.80.10 கோடியும் வசூல் செய்தது. மேலும், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் படி, ஒன்பது நாட்களில் உலகம் முழுவதும் ரூ.735 கோடி வசூலித்துள்ளது.

ஜவான் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எய்ஜாஸ் கான், சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி ஆகியோரும் இப்படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். ஷாருக் கான் அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படத்தில் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Atlee Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment