ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான தமிழ் இயக்குனர் அட்லி தனது அடுத்த படத்தை ஹாலிவுட்டில் இயக்க உள்ளதாவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதற்காக உறுதியை அட்லி கொடுத்துள்ளார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி, கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானர். ஷாருக்கான் நாயகனாக நடித்த இந்த படம், உலகளவில் ரூ 1,160 கோடி வசூலித்து அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு புதிய மைல்கல்லை குறித்தது.
ஆங்கிலத்தில் படிக்க : Jawan director Atlee Kumar confirms Hollywood project, reveals when fans can expect it: ‘There will be a great announcement’
மேலும் ஜவான் 2023-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த 2வது இந்தித் திரைப்படமாகவும், எல்லா காலத்திலும் 5-வது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகவும் உள்ளது. இந்த படத்திற்கு பின் பல நேர்காணல்களில் பங்கேற்ற அட்லி, ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். வழங்கினார். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தனது கனவு நனவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது திரைப்படங்களைப் பார்ப்பதற்கு நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யும் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவது தான் தனது நோக்கம் என்பதை உறுதிப்படுத்திய அட்லி, தனது முதல் படத்திலிருந்து இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். "நான் என் வாக்குறுதிக்கு உண்மையாக இருக்கிறேன். என் பொறுப்பை அப்படியே கடைபிடித்து வருகிறேன். எதிர்காலத்தில், நான் எப்போதாவது ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கினால், அப்போதும் எனது உறுதியுடன் அந்த படத்தை இயக்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டியில், ஹாலிவுட் படம் உண்மையில் நடக்கிறதா என்று அட்லீயிடம் கேட்டபோது, “ஆம், அது நடக்கிறது. பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் ஆனது... ஒருவேளை அடுத்த மூன்று வருடங்களில் ஹாலிவுட் படம் குிறத்து ஒரு சிறந்த அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம். நான் அதை செய்து கொண்டு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். அக்டோபர் 2023 இல், ஜவான் வெளியானதைத் தொடர்ந்து, ஹாலிவுட் ஸ்டுடியோவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்தியா டுடே-வுக்கு அளித்த பேட்டியில் அட்லி தெரிவித்தார். நான் ஹாலிவுட் படம் பண்ண வேண்டும், ‘நாம்’ ஹாலிவுட் படம் பண்ண வேண்டும் என்று சொல்ல விரும்பவில்லை. கடவுள் விரும்பினால், நான் செய்வேன் என கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் மற்றொரு நேர்காணலில், ஜவான் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்ற, அட்லி,“எங்கள் படத்தில் பணியாற்றியவர்கள் ஹாலிவுட்டில் இருந்து வந்தவர்கள். அதிரடி இயக்குனர் ஸ்பிரோ ரசாடோஸ் எங்களுடன் பணியாற்றினார். அப்போது அவர்கள், 'நீங்கள் ஹாலிவுட்டில் பணியாற்ற விரும்பினால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்' என்று என்னிடம் சொன்னார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“