தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி (2016), மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படங்கள் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டன. குறிப்பாக தெறி மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. வசூலிலும் பெரிய லாபத்தை கொடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Nayanthara-1.jpg)
எனினும் இந்தப் படமும் அதன் பின்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் (2017) படமும், தொடர்ந்து வெளியான பிகில் படமும் காபி பேஸ்ட் சர்ச்சையில் சிக்கின.
நெட்டிசன்கள் வலையொளி சேனல்களில் ஒரே டிக்கெட்டில் 2 முதல் 4 படங்கள் பார்க்க வேண்டுமா? அட்லீ படத்துக்கு செல்லுங்க என கலாய்க்க தொடங்கினர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Atlee-1.jpg)
எனினும் அட்லீ தனது கமர்ஷியல் ஜானரில் மிகத் தெளிவாக உள்ளார். அவரது படங்கள் சிறந்த பொழுதுபோக்கு படமாக உள்ளன என்ற கருத்தும் உள்ளது.
குறிப்பாக அவரது படத்தில் பாடல்கள், காட்சியமைப்புகள் சிறப்பாக உள்ளன என்ற கருத்தும் மேலோங்குகிறது. இந்த நிலையில், தற்போது பாலிவுட் கிங்காங் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Jawan-Vijay-Sethupathi-Shahrukhhan.jpg)
இந்தப் படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடித்துள்ளார் என்றெல்லாம் பேசப்பட்டது. படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் நாளே வசூலே ரூ.100 கோடியை தாண்டிவிட்டது என்கின்றனர்.
படமும் ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் என்றெல்லாம் ஷாருக் ரசிகர்கள் பேசிவருகின்றனர். இந்த நிலையில் படம் 1989ல் வெளியான சத்யராஜின் தாய் நாடு படத்தை தழுவி எடுக்கப்ப்டடதுபோல் உள்ளது என நெட்டிசன்கள் தற்போது கலாய்த்துவருகின்றனர்.
ஜவான் படத்தில் ஷாருக்கான் போலீஸ் அதிகாரி உள்பட இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“