/indian-express-tamil/media/media_files/2025/09/15/jay-crisilda-2025-09-15-16-15-02.jpg)
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி இருக்கிறார், அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அறிவித்தார். மேலும், அவர் ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த திருமணத்தை பொதுவெளியில் உறுதிப்படுத்தவில்லை, அமைதி காத்து வந்தார்.
இந்த விவகாரம் முற்றிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கருவைக் கலைக்கச் சொன்னதாகவும் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த சர்ச்சை, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஜாய் கிரிசில்டா மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆனால் ஜாய் கிரிசில்டா எங்களுடைய உறவு ஸ்ருதிக்கும் தெரியும் என்றார்.
சில யூடியூப் பக்கங்களுக்கு பேட்டி அளிக்கும்போது அவர் இதனை கூறியும் உள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது அவர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவார். ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்கள் வெளியான நிலையில் தற்போது சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜாய் கிரிசில்டாவும் ரங்கராஜும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வாடிக்கை ஜாய் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது "வாழ்க்கை துணை" என்ற வாசகத்துடன் இரண்டு புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிந்துள்ளார்.
‘வாழ்க்கை துணை’ என்று அழைப்பார்கள்…
— Joy Crizildaa (@joy_stylist) September 14, 2025
பிறகு….. 😂@MadhampattyRR#madhampattyrangaraj#chefmadhampattyrangaraj#rangarajpic.twitter.com/eGhaZYAd8n
அதில், ஜாய் கிரிசில்டாவுக்கு மாதம்படி ரங்கராஜ் முத்தம் கொடுப்பது போலவும், ஜாய் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதுடன் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாக வலம் வர தொடங்கியுள்ளது. இவர்களின் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் விவாதத்தை சமூக வலைத்தளத்தில் கிளப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us