Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜெயலலிதா ’தலைவி’: சோபன் பாபு கதாபாத்திரத்தில் பெங்காலி நடிகர்

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு அனைத்து மொழிகளிலும் ‘தலைவி’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayalalithaa biopic, shoban babu

Jayalalithaa biopic, shoban babu

Jayalalithaa Biopic : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்கிறார். கூடவே அரவிந்த் சாமி, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

இந்தியன் என்று சொல்லடா… தலைநிமிர்ந்து நில்லடா : இந்திய வம்சாவளி டிரைவருக்கு அமெரிக்க போலீஸ் பாராட்டு

பல மாத யோசனைகளுக்குப் பிறகு, பெங்காலி நடிகர் ஜிஸ்ஷு செங்குப்தாவை, ஷோபன் பாபு கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். கடந்த ஆண்டு என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமான ஜிஸ்ஷு அந்தப் படத்தில்,  எல்.வி.பிரசாத் வேடத்தில் நடித்தார்.

மூத்த தெலுங்கு நடிகரான சோபன் பாபுவும் ஜெயலலிதாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டு, சில படங்களும் வெளியாகின. ஆகையால் படத்தில் இவர்களது கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ள இப்போதே தயாராகி விட்டனர் ரசிகர்கள். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு அனைத்து மொழிகளிலும் ‘தலைவி’ என்றே பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு அனுமதி இல்லை! காரணம் என்ன தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். மூத்த எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது அத்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Jayalalithaa Al Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment