ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்

Thalaivi: இந்தப் படத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க, அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியிருக்கிறார். 

By: November 22, 2019, 10:21:16 AM

Jayalalithaa’s Biopic : மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, குறைந்தது அரை டஜன் படங்கள் வரவிருப்பதாக தெரிகிறது. இவை அனைத்திலும் மிக முக்கியமான தயாரிப்பாக கருதப்படுவது, இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி’ திரைப்படம். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். பல மொழிகளில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க, அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான, என்.டி.ஆர் வேடத்தில் நடிக்க, அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆரை அணுகினாராம் ஏ.எல்.விஜய். ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் ஜூனியர் என்.டி.ஆரோ அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டாராம். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வரும், தற்போது ‘RRR’ என்ற வரலாற்று திரைப்படத்தில், கொம்மரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதில் ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் பிரியதர்ஷினி, ‘அயர்ன் லேடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அதோடு ரம்யா கிருஷ்ணனை வைத்து, இயக்குநர் கெளதம் மேனன் ஒரு வெப் சிரீஸை இயக்குவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Jayalalithaa biopic thalaivi al vijay junior ntr

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X