Jayaram Jayalalithaa Biopic: மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பிரியதர்ஷினி இயக்கத்தில் படமாக உருவெடுக்க உள்ளது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரது ஆட்சி காலத்திலேயே உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு பிறகு இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல இயக்குநர்கள் நீயா நானா என்று போட்டியிட்டு வருகின்றனர்.
தி அயர்ன் லேடி - ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் :
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் குழுவில் துணை இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடன் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டார்.
இந்த படத்திற்கான படபிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா கதாப்பாத்திரத்திற்கான தேர்வு நடைபெற்றுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் மற்றும் அவருடன் இறுதி வரை இருந்த சசிகலாவாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடுவேன் என்று படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நொடியில் இருந்து, அதிமுக-வை சேர்ந்த பலரும் பிரியதர்ஷினிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.