Queen Web Series : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முன் வந்தனர். இதற்கிடையே இயக்குநர் கெளதம் மேனனுன், ‘கிடாரி’ இயக்குநர் பிரஷாந்த் முருகேசனும் ‘குயின்’ என்ற பெயரில் ஜெ-வின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கியுள்ளனர்.
Advertisment
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
இதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘சக்தி சேஷாத்ரியாக’ ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளர். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கும் இந்த வெப் சிரீஸில் சிறு வயதில், அனிகா சுரேந்திரனும், இளவயதில் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கியமானவராகக் கருதப்படும் எம்.ஜி.ஆராக இந்திரஜித் சுகுமாரனும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சிமி அகர்வால் ஜெயலலிதாவை எடுத்த நேர்க்காணல் மிகவும் பிரபலமானது. அந்த நேர்க்காணலில் இருந்து தான் இந்த ‘குயின் வெப் சிரீஸ்’ தொடங்குகிறது. ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தனது வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார். அவரது பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு தகர்ந்துப் போனது, சினிமாவில் கால் பதித்து முன்னணி நடிகையாக ஜொலித்தது, அரசியலில் பிரவேசித்து, தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக ஆனது என படிப்படியாக சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளது.
அம்மாவுடன் சண்டை, வீட்டில் வறுமை, விருப்பமில்லாத சினிமா, எம்ஜிஆரின் இறப்பு என மொத்தம் 13 எபிசோட்கள். ஒவ்வொரு எபிசோடும் 40 நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிறது. இந்த குயின் இணையத் தொடரை மும்பையைச் சோ்ந்த எம்எக்ஸ் பிளேயா் நிறுவனம் இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது. இது ஜெயலலிதா ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் அதே வேளையில், இதனை திரைப்படமாக இயக்கியிருந்தால், தியேட்டரில் இன்னும் நிறைய வரவேற்பு கிடைத்திருக்கும் எனவும் கூறுகிறார்கள்.