Arjun Kapoor to Star Hindi Remake of Jayam Ravi’s Comali: அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்த ’கோமாளி’ படத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜெயம்ரவி.
தற்போது, இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்கிறார். அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த அவர், தமிழில் உள்ள மற்ற நல்ல படங்களை ஆராய்ந்து அவற்றையும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
Thank u so much @actor_jayamravi !!! We hope to do justice to the film you and the team made and spread the joy and happiness in Hindi as well… from Thani Orvan to Comali your work is an inspiration… https://t.co/SMciT0zJuP
— Arjun Kapoor (@arjunk26) September 22, 2019
சமீபத்திய அப்டேட்டின்படி, தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனமான ”பே வியூ ப்ராஜெக்ட்ஸ்” இந்தி உட்பட அனைத்து மொழிகளுக்கும் ”கோமாளி” படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இந்தி பதிப்பில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தில் அர்ஜுன் கபூர் மறுபரிசீலனை செய்வார் என்று லேட்டஸ்ட் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”உலகின் அனைத்து மொழிகளுக்கும் கோமாளியின் ரீமேக் உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தி ரீமேக்கில், அர்ஜுன் நடிப்பார்” என்று போனி கபூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதோடு மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய போனிகபூர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகளவில் வெளியான கோமாளி படத்தின் தீம் அனைவருக்கும் பிடித்திருந்ததால், அது வெற்றிகரமான படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அதோடு படத்தின் வெற்றி தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் மகிழ்ச்சியடையச் செய்தது.