விஜய் – மோகன்ராஜா படத்தை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி!

Vijay – Mohan Raja: தற்போது தனி ஒருவன் – 2 படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக உள்ளார் ராஜா.

Vijay Mohan Raja project
மோகன் ராஜா – விஜய்

சர்கார் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய். இயக்குநர் அட்லீ இயக்கும் அந்தப் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யும் இயக்குநர் மோகன் ராஜாவும் புதிய படத்தில் இணைவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால் தளபதி 64 படத்தில் இவர்கள் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘கோமாளி’ படத்தின் புரொமோஷனில் கலந்துக் கொண்ட ஜெயம் ரவியிடம், விஜய் – மோகன்ராஜா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஜெயம் ரவி, “விஜய்யும் மோகன்ராஜாவும் மிகவும் நெருக்கமானவர்கள். சரியான படத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் டிஸ்கஸன் ஹோல்டு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் தற்போது தனி ஒருவன் – 2 படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக உள்ளார் ராஜா. விஜய்யும் ராஜாவும் ’தளபதி 65’ அல்லது ’தளபதி 66’ படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jayam ravi confirms vijay mohan rajas project

Next Story
குடும்பத்துடன் தாய்லாந்து ட்ரிப்: வைரலாகும் சிம்புவின் படம்!STR family trip
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com