Advertisment

‘ராஜா மாதிரி இருந்தான்...’ ஜெயம் ரவி குறித்து அவரது தந்தை மோகன் ராஜா வருத்தம்

நடிகர் ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான மோகன் ராஜா, “தன்னுடைய மகன் ஜெயம் ரவி ராஜா மாதிரி இருந்தான்” என்று வருத்தமாகப் பேசியுள்ளார். மேலும், தனது மூத்த மகன் ராஜா குறித்தும் பேசியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayam ravi mohan raja

நடிகர் ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான மோகன் ராஜா

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து விவாகரத்தை அறிவித்துள்ளார் என்று அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவி, ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பேராண்மை, பூலோகம், தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்றும், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். 

நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அவருடைய மனைவி ஆர்த்தி ரவி, இது அவர் தன்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெடுத்த முடிவு என்று அறிக்கை வெளியிட்டார். அதில்,  “இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு” என்றும், “திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே” என்றும்,  “தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்றும் ஆர்த்தி கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு, கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) புகார் அளித்தார்.

இதனிடையே, தனது குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசிய ஜெயம் ரவி,  “தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தாலும் முதல் 10 வருடங்கள் தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மூன்று வருடங்கள் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன். எனக்கு அந்த வீட்டில் சரியான மரியாதை கிடையாது. என்னுடைய பெயரில் சொந்தமாக ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. செலவுக்கு நான் என்னுடைய மனைவியிடம் தான் பணம் வாங்குவேன். என்னுடைய வரவு செலவு எல்லாவற்றையும் என்னுடைய மனைவிதான் பார்த்துக் கொண்டிருந்தார். நான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியே போகும்போது என் கையில் பணம் இல்லாமல் தான் காரை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்” என்று கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இதையெல்லாம் மறுத்து இருக்கிறார். 

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான மோகன் ராஜா,  “தன்னுடைய மகன் செய்த தப்பு இதுதான். அதனால் மூன்று வருடம் வீணாக போய்விட்டது என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.

ஜெயம் ரவியின் தந்தை மோகன் ராஜா, சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகர் சித்ரா லட்சுமணன் உடன் தன்னுடைய குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். 

இந்த நேர்காணலில், தன்னுடைய மகன் ஜெயம் ரவி குறித்து மோகன் ராஜா பேசியிருக்கிறார். 

மோகன் ராஜா பேசியிருப்பதாவது, “நான் உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் என்னுடைய மகன் பிறந்தான். ஆரம்பத்தில் நன்றாக இருந்த நிலையில் எனக்கு திடீரென்று கை, கால் இழுத்து வைத்து விட்டது. அப்போது என்னுடைய மகன் பிறந்த அடுத்த நாளே என்னுடைய உடலில் மாற்றம் தெரிந்தது. பிறகு ஒரு நாட்டு வைத்தியரின் உதவியால் நான் பழைய நிலைக்கு குணமாகி இருந்தேன். அவன் பிறந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது. என்னுடைய மகன் ஸ்கூலில் படிக்கும்போது அங்கு இருக்கும் நண்பர்கள் அவனை ஹீரோ போல நடத்த தொடங்கி விட்டார்கள். எப்போதும் எந்த பங்க்ஷன் நடந்தாலும் அதில் ஜெயம் ரவி இல்லாமல் இருக்க மாட்டான். பள்ளியில் டான்ஸ் புரோகிராமாக இருந்தாலும் சரி, விளையாட்டுப் போட்டிகளாக இருந்தாலும் சரி அதில் முதலாக ஜெயம் ரவி வந்துவிடுவார்.” என்று தனது மகன் ஜெயம் ரவியின் இளமைப் பருவம் பற்றி பெருமிதமாகப் பேசியுள்ளார். 

அந்த நேர்காணலில் மோகன் ராஜா மேலும் கூறுகையில், “இதுதான் இவனுடைய வாழ்க்கை என்று முடிவெடுத்து ஜெயம் ரவிக்கு 6 வயது இருக்கும் போதே பரதநாட்டியம் கிளாஸில் சேர்த்து விட்டேன். நான் நினைத்தது போல என்னுடைய மகன் நன்றாகவே டான்ஸ் ஆடிவிட்டான். அதற்குப் பிறகு 12 வயதில் ஒரு அரங்கேற்றம் நடத்தினேன். அப்போது கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர் என்னை பார்த்து இவர் தயாரிப்பாளர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு நடிகனை தயாரித்து வைத்திருக்கிறார் என்று சொன்னார். பிறகு 12 வயதில் பரதநாட்டியம் கிளாசை நிறுத்திவிட்டேன். காரணம் அதற்குப் பிறகு பரதநாட்டியத்தை தொடங்கினால் நடை மாறி விடும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கனல்கன்னன் உட்பட பலர் என்னிடம் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி நீ வெளிய போயிட்டு வா என்று சொல்லுவேன். அவர்களிடமிருந்து தான் குதிரை ஏற்றம், பைட் எல்லாம் ஜெயம் ரவி கற்றுக் கொண்டார்.” என்று கூறியுள்ளார். 

மேலும், “ஜெயம் ரவியை பம்பாயில் ஒரு கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொள்வதற்காக கொண்டு விட்டேன். அவர்கள் முதலில் சீட்டு தரமாட்டேன் என்றார்கள். நடிகர்களின் வாரிசுகள் வந்து ஒரு வருஷம்கூட நடிக்காமல் போய்விடுகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அப்படியெல்லாம் கிடையாது இவன் படித்து சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்போது அங்கு அவனுக்கு ஒரு தனியாக ரூம் எடுத்துக் கொடுத்து சமையல்காரையும் ரெடி பண்ணி கொடுத்து விட்டு வந்தேன். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் நடிக்கும் ஒரு நடிகராக மாறி இருந்தார்.” மோகன் ராஜா தனது மகன் ஜெயம் ரவி நடிகரானது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மூத்த மகன் இயக்குநர் ராஜா குறித்து பேசியுள்ள மோகன் ராஜா, “என்னுடைய மூத்த மகன் ராஜா ஆரம்பத்தில் இருந்து தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் நல்ல ஆர்வம் இருந்ததால் அதற்காக நான் அவரை தயார்படுத்திக் கொண்டு இருந்தேன். ஆனால். நான் சொல்லியும் கேட்காமல் மூன்று வருஷம் இயக்குனர் ஆவதற்கு படிக்கப் போறேன் என்று வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிவிட்டார். என்ன அவர் என்னிடமிருந்து இருந்தாலே ஒரு தயாரிப்பாளராக மாறியிருக்க முடியும். பலர் நம்மிடமிருந்து தயாரிப்பாளராக இருக்கிறார்கள். ஆனால், ராஜா நான் படித்தே ஆகவேண்டும் என்று சொல்லி படித்து முடித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment