நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து விவாகரத்தை அறிவித்துள்ளார் என்று அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் சர்ச்சையானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவி, ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பேராண்மை, பூலோகம், தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்றும், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அவருடைய மனைவி ஆர்த்தி ரவி, இது அவர் தன்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெடுத்த முடிவு என்று அறிக்கை வெளியிட்டார். அதில், “இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு” என்றும், “திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே” என்றும், “தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்றும் ஆர்த்தி கூறியிருந்தார்.
சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில், மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு, கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“